வியாழன், டிசம்பர் 15, 2011

இறைவனின் அணுத்துகள் என அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸன் குறித்த சான்றுகள் – விஞ்ஞானிகள் தகவல்

அணு விஞ்ஞானத்தில் மிகப்பெரிய கண்டுபிடிப்பாக விஞ்ஞான உலகம் மதிப்பீடு செய்யும் ’ஹிக்ஸ்போஸன்’(இதனை இறைவனின்
அணுத்துகள் எனஅழைக்கிறார்கள்)இருப்பதற்கான சான்றுகள் தென்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

ஜெனீவாவில் ஸேணில் நடந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் இதுக்குறித்த தகவலை வெளியிட்டனர். தற்பொழுது ’ஹிக்ஸ்போஸன்’ குறித்த சான்றுகள் மட்டுமே கிடைத்துள்ளதாகவும், இனியும் ஒரு வருடகால ஆய்விற்கு பிறகே உறுதியாக கூறஇயலும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

அணு என்பது புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் ஆகிய துகள்களை கொண்டதாகும். அணுவில் இருக்கும் புரோட்டானுக்கு நிறை அளிக்கக்கூடியது அதில் இருக்கும் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகிய துணை அணுத்துகள்களாகும். ஆனால் புரோட்டானின் நிறைக்கு இன்னொரு அணுத்துகள்தான் அடிப்படைக் காரணம் என விஞ்ஞானிகள் கருதினர். அதற்கு அவர்கள் ஹிக்ஸ் போஸன் என பெயரிட்டனர்.

புரோட்டானுக்கு நிறையை அளிக்கும் அடிப்படையான கட்டமைப்பை குறித்து விவரித்த விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸின் பெயரை இந்த அணுத்துகளுக்கு சூட்டினர்.அதுதான்ஹிக்ஸ் போஸன் என அழைக்கப்பட்டது. இதுவரை உறுதிப்படுத்தப்படாத இந்த ‘ஹிக்ஸ்போஸன்’ தான், உண்மையிலேயே பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருக்கமுடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பிரபஞ்சத்தின்(Universe) அடிப்படை இறைவன் என்பதால் அதற்கு ’இறைவனின் அணுத்துகள்’(God’sparticle) என பெயரிட்டனர். இதனைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் ‘ஹிக்ஸ் போஸனை’ குறித்த ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டனர். டிரில்லியன் கணக்கிலான புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் எதிரெதிரே மோதவிட்டு உடைத்து சிதறடித்தால் குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என்று அதுசிதறும். கூடவே,’ஹிக்ஸ்போஸன்’ துகளும் புரோட்டானிலிருந்து வெளியே வரும் என்ற நம்பிக்கையில்தான் ஜெனீவாஅருகே பூமிக்கு அடியில், Large Hadron Collider என்றஅதிநவீன கருவியை பெரும் செலவில் அமைத்தனர்.

இங்கு அட்லஸ், சிஎம்எஸ் ஆகிய குழுக்கள் நடத்திய தனித்தனி சோதனைகளில் ‘ஹிக்ஸ்போஸன்’ என்ற ஒரு விஷயம் இருப்பது உண்மை தான் என்று தெரியவந்துள்ளது. நேரடியாக இந்தத் துகள் வெளிப்படாவிட்டாலும்,அது இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
இதன் எடை 126 பில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ்(electron volts) என்றும், இது புரோட்டானைவிட 250,000 மடங்கு அதிக எடை கொண்டது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது பிரபஞ்சத்தின் பெரும் பாரம் ‘ஹிக்ஸ்போஸன்’ தான்.

இருப்பினும் இதை மேலும் உறுதிப்படுத்த அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தேவை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த சோதனை வெற்றியடைந்தால், கடந்த அரைநூற்றாண்டில் அணு விஞ்ஞானத் துறையில் இது மிகப்பெரி கண்டுபிடிப்பாக அமையும். இதனை ஸேண் பரிசோதனைகளின் ஊடக செய்தித் தொடர்பாளர் ஃபாபியோகியா நோட்டி அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: