வியாழன், டிசம்பர் 15, 2011

டேய் யாரு நீ? என்ன பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை : விஜயகாந்த் உளறல்

முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசின் தமிழக விரோத போக்கை கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் தேனி பகவதி அம்மன் கோவில் திடலில்   கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தே.மு.தி.க. நிறுவனரும், எதிர்க்கட்சித் தவைருமான விஜயகாந்த்,
 
’’கருணாநிதியும், ஜெயலலிதாவும் மாறி மாறி மக்கள் மீது சவாரி செய்கிறார்கள்.  முதலமைச்சர் பதவிக்கு
கருணாநிதி.   ஆனால் முல்லைப்பெரியாறு பிரச்சனைக்கு ஸ்டாலினை அனுப்புகிறார்.  

குருட்டு பூனை விட்டத்தில் பாய்வது போல இந்த அம்மா எப்ப என்ன செய்யும் என்று தெரியாது.  இன்னும் விலைவாசி எப்படியெல்லாம்  உயரப்போகுது பாருங்க’’ என்று பேசியபோது,கூட்டத்தில் சலசலப்பு  ஏற்பட்டது.  ஒருவர் சத்தம் போட்டார்.
கட்சி துண்டைப்போட்டு ஏமாத்துற.   என்னய்யா வேடிக்கை பார்க்குறீங்க.  அவன அப்படியே தூக்கி எறிங்க’’ என்று ஆவேசப்பட்டார்.

பிறகு கொஞ்ச நேரம் முல்லைப்பெரியாறு அணை  விவகாரம் பற்றி பேசிவிட்டு,  ‘’என்ன பேசுகிறேன் என்று எனக்கே தெரியவில்லை.   இருந்தாலும் நான் சொல்ல வந்ததை சரியா சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். 
ஏன் என்றால் நான் பேசுவதற்கு முன்பு குறிப்பு எடுத்து வைத்திருந்தேன்.  குறிப்பில் இருந்த எல்லாவற்றையும்
பேசிவிட்டேன்.அதையும் மீறி பேசிவிட்டேன்’’ என்று பேசினார்.
விஜயகாந்த் சீரியசாக பேசிக்கொண்டிருந்தபோதும்,  உளறிக்கொட்டியபோதும்,  ஒரே மாதிரியாக சிரித்துக்கொண்டிருந்தனர் கூட்டத்தினர்.
உடனே விஜயகாந்த்,    ‘’டேய் யாரு நீ.  தைரியம் இருந்தா மேடைக்கு வா.  வேறு கட்சிக்காரன் நீ  இப்படி என்

கருத்துகள் இல்லை: