உப்பனாற்றில் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா என போலீசார்
விசாரித்து வருகின்றனர்.
கடலூர் அடுத்த செல்லங்குப்பம் குட்டியாண்டவர் கோவில் அருகே உப்பனாற்று கரையில் 30 வயது மதிக்க தக்க இளம் பெண்ணின் உடல் கிடந்தது. தகவலறிந்த முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்த பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் எனத் தெரியவில்லை. கருப்பு நிற ஜாக்கெட், சந்தன கலர் சேலை, கையில் கோல்ட் வாட்ச் அணிந்திருந்தார். இறந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக