பரங்கிப்பேட்டை ஜசிஜசிஜ வங்கியில் (ICICI BANK) இன்று மாலை 6.30 மணியளவில் ஏ.டி.ஏம் மையத்தில் பொதுமக்கள் பணம் எடுக்க சென்றபோது மிஷின் சரியாக வேலை செய்யவில்லை. அந்த சமயத்தில் அங்கு வந்த 25 வயதுடைய டி-சார்ட் மற்றும் ஷாட்ஸ் (அரைக்கால் சட்டை) அணிந்த இளைஞர் ஒருவர் அங்கு வந்து ஏ.டி.ஏம் மிஷினை திறந்து பார்த்து கொண்டிருந்தார்.
நன்றி: pno news
பொதுமக்கள் அவரிடம் சந்தேகப்பட்டு அடையாள அட்டை கேட்டனர். ஆனால் அந்த நபரிடம் அடையாள அட்டையும் இல்லை, அச்சமயத்தில் செக்யூரிட்டியும் இல்லாதால் திருடன் என்று நினைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு கூடியதால் வங்கி வளாகத்தில் மிகுந்த பரபரப்பு நிலவியது...
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்ததில் அந்த நபர் ஏ.டி.ஏம் மிஷினை ரிப்பர் செய்பவர்தான் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்த பின்னரே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சி விட்டனர்.
இந்த சம்பவத்தால் ஜசிஜசிஜ வங்கியில் பரபரப்பு நிலவியது...!
நன்றி: pno news
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக