ஞாயிறு, ஜனவரி 29, 2012

போலீசுக்கு லஞ்சம் கொடுத்த செய்திதாள்: லண்டனில் 4 பத்திரிகையாளர் கைது

போலீசுக்கு லஞ்சம் கொடுத்த செய்திதாள்: லண்டனில் 4 பத்திரிகையாளர் கைது

பிரிட்டனில் தொலைபேசி ஒட்டு கேட்பு குற்றச்சாட்டின் கீழ், லண்டன் "நியூஸ் இன்டர்நேஷனல்' பத்திரிகையின் நிருபர்கள் 4 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். தொலைபேசி ஒட்டு கேட்க போலீசாருக்கு இவர்கள் லஞ்சம் கொடுத்தனர் என்பது குற்றச்சாட்டு .இது தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட, "நியூஸ் இன்டர்நேஷனல்' தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


பிரிட்டன் மட்டுமின்றி, உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ரூபர்ட் முர்டோக்கின் மூடப்பட்ட, "நியூஸ் ஆப் த வேர்ல்டு' பத்திரிகையின் தொலைபேசி ஒட்டு கேட்பு, பலரது பதவிகளையும் காவு வாங்கி வருகிறது. இப்பத்திரிகையில் பணியாற்றி வந்த முன்னாள் ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள் மற்றும் நியூஸ் இன்டர்நேஷனல் தலைவர் ரெபெக்கா புரூக்ஸ் என, இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இக்குற்றச்சாட்டின் கீழ், லண்டன் மாநகர போலீஸ் கமிஷனர் பால் ஸ்டீபன்சன், பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமாவுக்கான காரணத்தில், "நியூஸ் இன்டர்நேஷனல் மூத்த அதிகாரிகளுடன் மாநகர போலீசாருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த யூகம் மற்றும் குற்றச்சாட்டின் கீழ் பதவியை ராஜினாமா செய்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.இன்றைய கைதுடன் 14 பேர் இந்த வழக்கில் சிக்கியுள்ளனர். முன்னதாக இந்த பத்திரிகை ஆபீசில் போலீசார் ரெய்டு நடத்தினர்.

 

கருத்துகள் இல்லை: