செவ்வாய், செப்டம்பர் 06, 2011

இந்தியாவில் 180 மில்லியன் முஸ்லிம்கள்– யு.எஸ். கணிப்பு

இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 180 மில்லியனிற்கு மேலுள்ளதாக யு.எஸ். நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

திங்கள், செப்டம்பர் 05, 2011

புவனகிரி பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம்

புவனகிரி பேரூராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புவனகிரி பேரூராட்சியில் 9வது வார்டிற்குட்பட்ட முத்தாட்சி பிள்ளையார் கோவில் முகப்பில் உள்ள காய்கறி மார்கெட் சந்து மற்றும் சந்தைத்தோப்பு மசூதி அருகிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் பைப்புகள்

ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

அதிமுக-வினர் விருப்பமனு: செல்வி ராமஜெயம் தொடங்கி வைத்தார்


உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு விருப்பமனு அளிக்கும் நிகழ்ச்சியை அதிமுக மாவட்ட மகளிரணிச் செயலரும், சமூக நலததுறை அமைச்சருமான செல்வி ராமஜெயம் சிதம்பரம் கீழ ரதவீதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில்

கடாபிக்கும் அமெரிக்க சிஐஏ-க்கும் இடையே ரகசிய தொடர்பு

திரிபோலியில் உள்ள உளவுத்துறை அலுவலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மூலம் அமெரிக்க உளவுத் துறைக்கும், கடாபி அரசுக்கும் இடையில் ரகசிய தொடர்புகள் இருந்தது தெரியவந்துள்ளது.

ஐ.நா. அறிக்கையைத் தொடர்ந்து துருக்கி இஸ்ரேல் தூதரை வெளியேற்றியது

இஸ்ரேல் தூதரை துருக்கி வெளியேற்றியது. அத்தோடு வரும் வெள்ளிக்கிழமை அது இஸ்ரேலுடன் இராணுவத் தொடர்புகளைத் துண்டிக்கிறது என்று துருக்கி கூறியுள்ளது.

ராம் தேவுக்கெதிராக என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு

ஆர்.எஸ்.எஸ். யோகாகுரு பாபா ராம் தேவுக்கெதிராகவும், அவரது ஹரித்துவார் ஆசிரமத்திற்கெதிராகவும் என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரகம் வழக்கு தொடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றது தொடர்பாக அந்நியச் செலாவணிச் சட்ட மீறல் சம்பந்தப்பட்ட வழக்கு இது.

புதிய பாதையில் சேது சமுத்திர திட்டம்?: ராமேஸ்வரத்தில் பச்செளரி குழு ஆய்வு

சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைப்பது குறித்து ஆர்.கே.பச்செளரி தலைமையிலான மத்திய அரசுக் குழுவினர் ராமேஸ்வரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.