ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

சிதம்பரம் அருகே வழிப்பறி கொள்ளையர் 5 பேர் கைது

சிதம்பரம் அருகே பஸ்ஸில் பயணம் செய்த நகை வியாபாரியிடம் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை வழிப்பறி செய்த வழக்கில் டிராவல்ஸ் உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீஸôர் வியாழக்கிழமை கைது செய்தனர்.


விழுப்புரம் மாவட்டம் கீழபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (48). நகை வியாபாரியான இவர் கடந்த மே 5-ம் தேதி இரவு ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளுடள் சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு பஸ்ஸில் சென்றார். புதுச்சத்திரம் பஸ்நிறுத்தம் அருகே பஸ் நின்றபோது, பின் சீட்டிலிருந்த இருவர் முருகேசன் வைத்திருந்த நகைப்பையை பறித்துக் கொண்டனர். பின்னர், அங்கு தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிவிட்டனர்.

இதுகுறித்து சிதம்பரம் ஏ.எஸ்.பி. துரை தலைமையில் 3 தனிப்படை அமைத்து போலீஸôர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த வழிப்பறியில் சம்பந்தப்பட்ட நபர்கள் காரில் வருவதாக போலீஸôருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆலப்பாக்கம் அருகே பெத்தாங்குப்பம் என்ற இடத்தில் காரை மடக்கினர். காரில் வந்த சிதம்பரத்தை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் முகமது ஜர்ஜீத் (39), விஜயராஜ் (31), சிவக்குமார் (32), சீர்காழியைச் சேர்ந்த பார்த்திபன் (24), மாதானத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த 200 கிராம் தங்க நகைகள், ரூ.1.75 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸôர் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.


கருத்துகள் இல்லை: