திங்கள், ஜனவரி 16, 2012

கருணாநிதி மகள் செல்வி மீது ரூ 69 லட்சம் மோசடி புகார்!


சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினர் பதவி வாங்கித்தருவதாக தன்னிடம் ரூ.69 லட்சம் பணம் மோசடி செய்ததாக கருணாநிதி மகள் செல்வி மீது போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் பரபரப்பு புகார் மனு கொடுத்துள்ளார்.

மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி வக்கீல் நல்லதம்பி இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார்.

மதுரை வண்டியூர் மெயின்ரோடு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் நல்லதம்பி. வக்கீலான இவர், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி ஆவார்.

இவர் நேற்று காலை 11 மணியளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து அவர் அளித்த புகார் மனுவில், "2006-ல் விருதுநகர் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக தி.மு.க.வில் இணைந்தேன். சென்னை வேளச்சேரி தி.மு.க. பகுதிச்செயலாளர் ரவி, எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர், என்னிடம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் 5 உறுப்பினர்களின் பதவி காலியாக உள்ளது என்றும், அதில் ஒரு உறுப்பினர் பதவியை வாங்கித்தருவதாகவும், அதற்கு ரூ.1 கோடி பணம் தரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: