செவ்வாய், மார்ச் 22, 2011

இராஜஸ்தானில் முஸ்லிம் காவல்துறை அதிகாரி உயிருடன் எரித்துக் கொலை

ஜெய்பூர்:ராஜஸ்தானிலுள்ள சவை மதோபூர் மாவட்டத்தில் முஹம்மத் என்ற முஸ்லிம் காவல் அதிகாரியை  மீனா சமூகத்தைச் சார்ந்த கலவரக்காரர்கள் உயிரோடு தீவைத்து கொளுத்தி கொடூரமாக கொலைச் செய்தனர்.

இந்தச் சமூகம் பாரதீய ஜனதா கட்சியுடன் நட்பு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில் அந்த முஸ்லிம் அதிகாரியை கலவரக் கூட்டம் தாக்கும் போது உடன்வந்த மற்ற காவலர்கள்
 நம்மைவிட்டால் போதும் என்று ஓட்டம் பிடித்துள்ளனர் என்பதுதான்.

நடந்த சம்பவம் குறித்து கிடைத்துள்ள செய்தியானது அடையாளம் தெரியாத சில மர்ம ஆசாமிகள் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலையத்தை எரித்ததோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த காவலதிகாரி முஹமதுவையும் தீ வைத்து கொளுத்தினர். அவர் உயிருடன் கொளுத்தப்பட்டார்.

ஒரு பெண் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் காவல்துறைக்கும் மீனா சமூகத்தினருக்கும் மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது. அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையை நடவடிக்கை எடுக்க கோரி தற்கொலை செய்துகொண்டதால் கலவரக்காரர்கள் மேலும் கொதிப்படைந்தனர். காவலர் முகமது கொல்லப்பட்டதோடு பதினைந்து காவல்துறை அதிகாரிகள் காயமுற்றதாகத் தெரிகிறது.

சவை மதோபூர் மக்கள்  இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கையில் பெண் கொலைக்கு கடந்த இரண்டு வாரங்களாக மதச்சாயம் பூசப்பட்டதாகவும் அதன் காரணமாகத்தான் காவலருடைய கொலை அரங்கேரியதாகவும் தெரிவித்தனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர் சில மர்ம நபர்கள் ஒரு பெண்ணிடம் வழிப்பறி செய்து கொலை செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து காவலதுறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

இதற்கிடையில் கொலையில் ஈடுபட்டவர்கள் சிறுபான்மையினச் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் காவல்துறை அதிகாரி முஹம்மது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பி.ஜே.பி. தூண்டுதலால் மீனா சமூகத்தைச் சார்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கடந்த 17 ஆம் தேதி மீனா சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்வதாக தகவல் வந்ததின் பேரில் தற்கொலையை தடுக்க முஹம்மது தலைமையில் காவலர்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்கொலையைத் தடுக்க முஹம்மது முயன்று கொண்டிருக்கையில் கூட்டத்திலிருந்த ஒருவர் முகமதுவின் தலையில் அடித்ததால் மயக்கமுற்றார். பின்னர் கலவரக்காரர்கள் முஹம்மதுவை காவல் வேனில் போட்டு தீவைத்தனர்.

சம்பவ இடத்தில் டிஎஸ்பி மற்றும் சக காவலர்கள் இருந்தும் முஹம்மதுவை காப்பாற்றாமல் ஓட்டம் பிடித்தனர். காவலர் முஹம்மது நேர்மையாக நடந்ததால் DSP  அவரிடம் விரோதப் போக்கை கடைப் பிடித்ததாக தெரிகிறது.
இந்த கொடூரக் கொலையால் அங்கு பதற்றம் நிலவி வருவதாக ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்தின் மாநிலத் தலைவர் முஹம்மது சலீம் two circles.net என்ற இணையதளத்திற்கு தெரிவித்தார்.

கடந்த வியாழனன்று முஹம்மதுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரையில் பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க முடியாதென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறை மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை சமாதானப்படுத்தியதோடு கொல்லப்பட்ட முஹம்மதுவின் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுமென்று முதலமைச்சர் அறிவித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சம்மந்தப்பட்ட டிஎஸ்பி பணி இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.  1000 க்கும் அதிகமான நபர்கள் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 21 நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த காவல் அதிகாரி முஹம்மதுவின் உடல் தனது சொந்த ஊரான சிகாரில் கடந்த வெள்ளியன்று  அடக்கம் செய்யப்பட்டது. இதைடுத்து ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்தின் மாநிலத் தலைவர் முஹம்மது சலீம் இறந்தவர் குடும்பத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வருடங்களாக மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லையென்றும் மாநில உள்துறை அமைச்சரை மாற்ற வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.

கருத்துகள் இல்லை: