வியாழன், மார்ச் 31, 2011

Sipcot

மொகாலி மைதானத்தில் தொழுகை நடத்தியது புனிதப் போராம்: பால்தாக்கரேயின் பிதற்றல்


‘பல் போனால் சொல் போச்சு’ என்றதொரு பழமொழி நம்ம ஊர்களில் புழக்கத்தில் உள்ளது. பல்லிழந்த கிழட்டு சிங்கமான பால்தாக்கரேக்கு சொல்  மட்டுமல்ல புத்தியும் பேதலித்துவிட்டதை அவ்வப்போது அவர் வெளியிடும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே பால்தாக்கரேக்கு இரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே எகிறும்.நேற்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தை காண பாக்.அதிபர் மற்றும் பிரதமருக்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்திருந்தார்.

லிபியா:எதிர்ப்பாளர்களுக்கு மேலும் பின்னடைவு


எதிர்ப்பாளர்களிடமிருந்து மேலும் நகரங்களை மீட்டுவரும் கத்தாஃபியின் ராணுவம் நேற்று முக்கிய எண்ணெய் நகரமான ராஸ் லனூஃபை கைப்பற்றியுள்ளது.
நேற்று முன்தினம் கத்தாஃபியின் ராணுவம் பின் ஜவாத் நகரத்தை மீட்டது குறிப்பிடத்தக்கது. பிராந்தியத்தில் மோதல் தொடர்வதாக செய்திகள் கூறுகின்றன.
ஆயுதங்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது தெரியாத காரணத்தினால் எதிர்ப்பாளர்கள் தோல்வியை சந்திக்க வேண்டியுள்ளது. இவர்கள் கிழக்கு நகரங்களை நோக்கி செல்கின்றனர். எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதம் வழங்குவதை புறக்கணிக்க இயலாது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

புர்ஜ் கலீஃபாவை வசப்படுத்திய ஸ்பைடர் மேன்


‘ஸ்பைடர்மேன்’ அலைன் ராபர்ட் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமான துபாயில் புர்ஜ் கலீஃபாவில் ஏறி சாதனை படைத்துள்ளார்.ஆறு மணிநேரத்தில் 828 மீட்டர்-(2,717 அடி) உயரமுள்ள புர்ஜ் கலீஃபாவின் உச்சிக்கு சென்றடைந்தார் பிரான்சை சார்ந்த அலைன் ராபர்ட்.
ராபர்ட்டின் சாகசத்தை நேரடியாக காண்பதற்கு ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். அதிகாரிகளின் பாதுகாப்பு கட்டளைகளை பேண வேண்டிய சூழல் ஏற்பட்டதால் முதல் முறையாக ராபர்ட் பாதுகாப்பு கவசத்தையும், கயிறையும் உபயோகித்தார்.

மேற்குவங்காளம்:1000 முஸ்லிம் கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் இல்லை


நீண்ட காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் 1000 முஸ்லிம் கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் இல்லை என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நேசனல் கவுன்சில் ஆஃப் அப்ளைட் எக்கணாமிக் ரிசர்ச்சின் முதன்மை அதிகாரி அபூ ஸலாஹ் ஷெரீஃப் நடத்திய ஆய்வில் மேற்கு வங்காள முஸ்லிம்களின் அவலநிலை சுட்டிக் காட்டப்படுகிறது.
3000 கிராமங்களில் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் கிடையாது. முஸ்லிம் கிராமங்களில் சமூக சூழல்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

எஸ்.டி.பி.ஐ. மற்றும் ம.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னங்கள் அறிவிப்பு


எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர்களும், சின்னங்களும்
பாளையங்கோட்டை(ஷாஹுல் ஹமீது உஸ்மானீ ஆலிம்),கடையநல்லூர்(நெல்லை முபாரக்), இராமநாதபுரம்(ஃபெரோஸ்கான்), பூம்புகார்(முஹம்மத் தாரிக்), புதுவை-நிரவி திருப்பட்டினம்(பத்ருதீன்) ஆகிய தொகுதிகளுக்கு டி.வி. சின்னமும்

கோவை தொண்டாமுத்தூர்(உமர் கத்தாப்) தொகுதி வேட்பாளருக்கு கேஸ் சிலிண்டர் சின்னமும்.
சென்னை துறைமுகம்(முஹம்மத் ஹுஸைன்), திருப்பூர் தெற்கு(அமானுல்லாஹ்) ஆகிய தொகுதிகளுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:முக்கிய சூத்திரதாரி கைது – என்.ஐ.ஏ


43 பாகிஸ்தானியர்கள் உள்பட 68 பேர் கொல்லப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சூத்திரதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு நடந்த கைது சம்பவம் விசாரணையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட நபர் குண்டுவெடிப்பின் பின்னணியில் நடந்த சதித்திட்டத்தில் தனக்கு பங்கிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் சதித்திட்டம் தீட்டியதில் பங்கேற்ற இதர நபர்களின் பெயர்களும் அவரிடமிருந்து கிடைத்துள்ளது. இவ்வழியிலான புலனாய்வும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புதன், மார்ச் 30, 2011

ஊழல்:இந்தியாவுக்கு நான்காவது இடம்

உலகிலேயே ஊழல்கள் அதிகமாக நடைபெறும் நாடு எது? என்பதுக் குறித்து அறிவதற்காக 16 நாடுகளில் நடத்தப்பட்ட சர்வேயில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வர்த்தக கன்ஸல்டன்ஸி நிறுவனமான பொலிடிக்கல் அண்ட் எக்கனாமிக் ரிஸ்க் கன்ஸ்லடன்ஸி லிமிடட், மிகச்சிறந்த ஊழல் நாடு எது? என்பதுக் குறித்த ஆய்வை மேற்கொண்டது.

நிரபராதிகளான முஸ்லிம்களின் புனர் வாழ்வுக்கு உதவுவோம்: தேசிய சிறுபான்மை கமிஷன்

தீவிரவாதிகள் என குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளான முஸ்லிம் இளைஞர்களுக்கு புனர் வாழ்வுக்காக உதவுவோம் என தேசிய சிறுபான்மை கமிஷன் அறிவித்துள்ளது.

இவர்கள் குற்றமற்றவர்கள் என பரிபூரணமாக சட்டரீதியாக உறுதிச் செய்யப்பட்டால் புனர்வாழ்விற்கான நடவடிக்கைகள் துவங்கப்படும் என கமிஷனின் தலைவர் வஜாஹத்  ஹபீபில்லாஹ் தெரிவித்துள்ளார்.

வேட்பாளரை அடிக்கும் விஜயகாந்த் தலைவரா? வடிவேலு

சொந்த கட்சி வேட்பாளரையே தாக்கும் விஜயகாந்த் ஒரு தலைவரா என, நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர் தனது பெயரை பாஸ்கர் என கூறியுள்ளார்.

செவ்வாய், மார்ச் 29, 2011

இந்தியாவில் ஊழலை ஒழிக்க அமெரிக்காவில் தண்டி யாத்திரை

1930-ஆம் ஆண்டு இந்தியாவில் காந்தியடிகள் தலைமையில் நடந்த தண்டி யாத்திரையை நினைவுக்கூறும் விதமாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மேற்கொண்ட 240 மைல் தூர பேரணி சான்ஃபிரான்சிஸ்கோவில் காந்தி சிலைக்கு அருகே நிறைவுற்றது.
‘இந்தியாவில் ஊழலை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து  ‘இரண்டாவது தண்டி யாத்திரை’ ஏற்பாடுச் செய்யப்பட்டதாக பேரணியின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அனைத்து தரப்பினரும் என்னை ஏற்றுக் கொள்கின்றனர்:மூ.மு.க., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார்

"அனைத்து தரப்பு மக்களும் என்னை ஏற்றுக்கொண்டு விட்டதால் எனது வெற்றிக்கு தடை இருக்காது'' என சிதம்பரம் மூ.மு.க., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கடந்த ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் அதைவிட கூடுதலாக மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. அத்துடன் பா.ம.க., - வி.சி., - காங்., கட்சிகள் கூட்டணியில் இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம்.சிதம்பரம் தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

நீ ஆம்பளயா இருந்தா... - விஜயகாந்தை விளாசும் வடிவேலு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் 41 சீட் வாங்கி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் நடிகர் வடிவேலு விஜய்காந்தை தாக்கோ தாக்குன்னு தாக்கி வருகிறார்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘’அதிமுகவில்

எகிப்து:ஹோஸ்னி முபாரக்கும் அவரது குடும்பத்தாரும் வீட்டுக் காவலில்!


கெய்ரோ:எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கும் அவரது குடும்பத்தாரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமையன்று முபாரக்கின் குடும்பம் சவூதி அரேபியா சென்றுவிட்டதாக வந்த தகவலையடுத்து ராணுவ அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க உளவாளிகளை பிடிக்க தாலிபானின் புலனாய்வுக் குழு


ஆளில்லா விமானத் தாக்குதல்(ட்ரோன்) நடத்துவதற்கு அமெரிக்காவிற்கு ரகசிய தகவல்களை பரிமாறும் உளவாளிகளை கண்டறிய பாகிஸ்தானின் வடக்கு பகுதியான வஸீரிஸ்தானில் தாலிபான்கள் தனியாக புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளனர்.

லக்‌ஷர்-இ-குராஸான் என்ற பெயரிடப்பட்ட இக்குழுவினருக்கு, உளவாளிகளை கைது செய்து மரணத்தண்டனை விதிக்க தாலிபான் அதிகாரம் வழங்கியுள்ளதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

கத்தாஃபியின் சொந்த நகரை மீட்டதாக எதிர்ப்பாளர்கள் தகவல்


லிபியாவின் ஏகாதிபத்திய அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் சொந்த நகரான ஸிர்த்தை மீட்டதாக எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் வெற்றியை ஈட்டியதாக எதிர்ப்பாளர்களின் தேசிய கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஷம்ஸி அப்துல் மொலாஹ் தெரிவித்துள்ளார்.

பெங்காசியில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எதிர்ப்பாளர்கள் தங்களது வெற்றியைக் கொண்டாடினர். அதேவேளையில், ஸிர்த்தில் கத்தாஃபியின் ராணுவம் தாக்குதலை பலப்படுத்தியதாக செய்திகள் கூறுகின்றன.

இந்தியா-பாக். பேச்சுவார்த்தை நம்பிக்கையளிக்கிறது: உள்துறை செயலாளர்கள்


இந்தியா-பாகிஸ்தான் உள்துறைச் செயலாளர்கள் நேற்று புதுடெல்லியில் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து மணிநேரம் நீண்ட பேச்சுவார்த்தை பயனுள்ளதாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் அமைந்தது என இந்தியா-பாகிஸ்தான் உள்துறை செயலாளர்களான ஜி.கே.பிள்ளையும், சவ்தரி கமருஸ்ஸமானும் அறிவித்தனர்.

2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலைத் தொடர்ந்து நிலைத்துப்போன நட்புறவுக்கான சமாதான முயற்சிகள் மீண்டும்

பாரபட்சத்தி​ன் நேரடி காட்சிகள் -​ கொல்கத்தாவி​ன் தில்குஷா காலனி முஸ்லிம்கள்


தில்குஷா காலனியில் வசிக்கும் ஆயிஷா பீவிக்கு 4 பிள்ளைகள். அவர்களில் 3 பேர் பெண்கள். தெருக்களில் செருப்புகளை பொறுக்கி அதிலிருந்து தோலை பிரித்தெடுப்பதுதான் அவர்களின் பணி. இரவு பகலாக உழைத்தாலும் ஒரு நாளைக்கு கிடைப்பதோ அறுபது ரூபாய் மட்டுமே.ஷீட்டுகளால் மறைக்கப்பட்டதுதான் அவர்களது வீடு.

தலித்துகளை விட மோசமான வாழ்க்கை சூழலுக்கு சொந்தக்காரர்கள் என சச்சார் கமிட்டியால் அழைக்கப்பட்ட, புழுக்களைப் போல் வாழ்க்கையை

திங்கள், மார்ச் 28, 2011

Al Marai Job

Jobs in Al Marai Co., Riyadh, Saudi Arabia. Interview in India From March 18th 2011 to March 31st 2011 - Free Recruitment 
இந்திய அரசியல் முஸ்லீம்களுக்கு ஹராமா?


o இஸ்லாத்தின் அரசியல் கொள்கை

o இந்திய அரசியல் கொள்கை

o ஜனநாயகத்துக்கு முரணான ஜனநாயகம்

o (இந்திய) அரசியல் குறித்த அரசியல்வாதிகளின் பார்வை

o இஸ்லாமுக்கும் இந்திய அரசியலுக்குமுள்ள அடிப்படை வேறுபாடுகள்

o பெரும்பான்மை குறித்து இந்திய அரசியலும் இஸ்லாமும்

காஸ்ஸாவில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்: இரண்டு பேர் பலி

ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் நேற்று இஸ்ரேலிய ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேருக்கு காயமேற்பட்டது.

ஜபலியாவின் கிழக்கு பகுதியில் தாக்குதல் நடந்ததாக காஸ்ஸா எமர்ஜென்சி சர்வீஸ் செய்தித் தொடர்பாளர் ஆதம் அபூஸென்மியா அல்ஜஸீராவிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் தங்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல் நடத்த

லிபியாவில் புரட்சி வெல்லும் – எதிர்ப்பாளர்கள் தலைவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி

கத்தாஃபியின் மோசமான ஆட்சிக்கெதிராக லிபியா மக்கள் நடத்திவரும் போராட்டம் வெற்றிப் பெறுமென எதிர்ப்பாளர்களின் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.அலி ஸல்லாபி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:”லிபியாவில் அனைத்து பிரிவைச் சார்ந்த மக்களும் அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். பல கோத்திரங்களிலிருந்து வந்த இளைஞர்கள் தற்பொழுது போராட்டத்தை வழி நடத்துகிறார்கள். ஆதலால், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டதைப் போன்று புரட்சிக்கு பிறகு உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.

லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!

[ அமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான். லிபியாவின் பெட்ரோல் வர்த்தகத்தில் அமெரிக்க ஐரோப்பிய நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தாலும் அது இன்று வரையில் முழுமையாக தனியார்மயமாக்கப் படவில்லை. தேசிய பெட்ரோலிய கார்ப்பொரேஷன் எனும் அரசுடைமை ஆக்கப்பட்ட நிறுவனத்தின் கீழ் தான் லிபியாவின் எண்ணை வளம் இருந்து வருகிறது.

அதோடு கூட்டு ஒப்பந்தங்கள் வழியாகத் தான் அமெரிக்க நிறுவனங்கள் பெட்ரோல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றது.ஐக்கிய நாடுகள் சபையில் லிபியாவின் மேல்

அருண் ஜெட்லியிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும் – ராம் விலாஸ் பஸ்வான்

ஹிந்துத்துவா சக்திகள் தீவிரவாதத்தை அரசியல் ஆதாயத்திற்காக உபயோகிப்பதாக லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஹிந்துத்துவா தேசிய வாதத்தை பா.ஜ.கவின் சந்தர்ப்பவாதம் என அருண் ஜெட்லி அமெரிக்க தூதரிடம் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த சூழலில் அவரை தீவிரவாத வழக்குகளை கையாளும் என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டுமென பஸ்வான் வலியுறுத்தியுள்ளார்.

ஞாயிறு, மார்ச் 27, 2011

மந்த நிலையில் விசாரணை – சிறையில் வாடும் முஸ்லிம் இளைஞர்கள்

சிமி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களின் சிறைவாசம் மூன்று ஆண்டுகளை தாண்டிவிட்டது.

கடந்த 2008 மார்ச் 26-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்தது. இவர்களை கைது செய்த பிறகு ஐந்து மாநிலங்களில் ஏராளமான வழக்குகளில் இவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டார்கள்.

இவர்களை கைது செய்த பிறகு நடந்த குண்டுவெடிப்பு வழக்குகளிலும் குற்றவாளிகளாக

சபர்மதி எக்ஸ்பிரஸை கண்டது கூட இல்லை – கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்ட உமர்ஜி

நான் ஒருபோதும் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலை கண்டது கூட இல்லை” என கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் 8 ஆண்டுகள் அநியாயமாக சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு குற்றமற்றவர் என விடுதலைச் செய்யப்பட்டுள்ள ஸஈத் உமர்ஜி தெரிவித்துள்ளார்.

“நிரபராதிகளான முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை வழக்கில் சிக்கவைத்தார்கள்” என மெளலான ஹுஸைன் இப்ராஹீம் உமர்ஜி என்ற ஸஈத் உமர்ஜி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

குஜராத் இனப்படுகொலை வழக்கு சட்ட உதவியாளர் ஹரீஸ் சால்வேக்கு மோடி அரசுடன் வர்த்தக தொடர்பு

குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் அமிக்கஸ் க்யூரியாக (சட்ட உதவியாளர்) நியமிக்கப்பட்டுள்ள பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேக்கு குஜராத் அரசுடன் தொடர்புடைய வர்த்தக திட்டங்களில் பங்கிருப்பதாக டெஹல்கா பத்திரிகை கூறுகிறது.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இரோஸ் எனர்ஜி நிறுவனத்திற்கு குஜராத்தில் 50 மெகாவாட் மின் சக்தி திட்டத்திற்காக குஜராத் அரசிற்கும் இரோஸ் எனர்ஜி உரிமையாளர் கிஷோர் லுல்லாவுக்காகவும் சால்வே இடைத்தரகராக செயல்பட்டார் என்பதற்கான ஆதாரங்களை டெஹல்கா வெளியிட்டுள்ளது.

ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்க தகுதி படைத்தோர் யார்?

[ எதற்கெடுத்தாலும் விழுந்தடித்துக் கொண்டு மார்க்கத் தீர்ப்பு வழங்கப்படும் ஒரு படு பயங்கரமான காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இணையத்திலும் ஏகப்பட்ட தளங்கள் ஃபத்வாக்கள் வழங்கி வருகின்றன. ஏட்டிக்குப் போட்டியான ஃபத்வாக்களுக்கும் குறைவில்லை.உரத்த குரலில் பிரசங்கம் செய்வோரெல்லாம் மார்க்கத் தீர்ப்பு வழங்க தகுதியுடையோர் என பொது மக்கள் பொதுவாக எண்ணிக்கொண்டுள்ளனர்.

உரக்க 'பயான்' செய்வது ஒருவரை முஃப்தியாக்கி விடாது. அது போல முஃப்தி என்பது ஒரு பட்டமும் அல்ல. இஸ்லாத்தின் மூலாதாரங்களிலிருந்து சட்டங்களை ஆய்ந்தெடுக்கும் ஆற்றல் பெற்றவரான முஜ்தஹிதே ஆரம்ப காலத்தில் முஃப்தி என அழைக்கப்பட்டார்.

ஜோர்டான்:எதிர்ப்பாளர்கள் 2 பேர் படுகொலை

தலைநகரில் முகாமிட்டிருந்த எதிர்ப்பாளர்கள் மீது அரசு ஆதரவாளர்களும், கலவரத்தடுப்பு போலீசாரும் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

பல மணிநேரம் நீண்ட மோதலில் போலீஸ்காரர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டது. போராட்டம் நடத்திய மாணவர்களின் முகாமை நேற்று முன்தினம் போலீஸ் சேதப்படுத்தியது.

லிபியா:எதிர்ப்பாளர்கள் அஜ்தாபியாவை மீட்டனர்

 

லிபியாவில் முக்கிய எண்ணெய் நகரமான அஜ்தாபியாவை கத்தாஃபி ராணுவத்திடமிருந்து எதிர்ப்பாளர்கள் மீட்டுள்ளனர்.

ராணுவ டாங்குகள் மீது ஏறி எதிர்ப்பாளர்கள் வெற்றியைக் கொண்டாடும் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

பல நாட்கள் நீண்ட தாக்குதல்களுக்கு பிறகு ஒரு வாரத்திற்கு முன்புதான் கத்தாஃபியின்

ஆர்.எஸ்.எஸ். தொடர்பு – வேட்பாளரை மாற்றிய மம்தா

ஆர்.எஸ்.எஸ் தொடர்புடைய வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலிருந்து நீக்கியுள்ளார் மம்தா பானர்ஜி.

மேற்குவங்காளத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டது.

இப்பட்டியலில் ஜோராஸாங்கோ தொகுதிக்கான வேட்பாளராக சாந்திலால் ஜெயின் என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் முன்பு பா.ஜ.கவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தவராவார். மேலும் இவர் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்புடையவர்.

சனி, மார்ச் 26, 2011

ஹிந்துத்​துவா -பா.ஜ.​கவுக்கு சந்தர்ப்பவா​தம் – விக்கிலீக்​ஸ் தகவல்

பா.ஜ.கவின் ஹிந்து தேசியம் என்பது வாக்கு வங்கிக்கான சந்தர்ப்பவாதம் மட்டுமே என மூத்த பா.ஜ.க தலைவர் அருண் ஜெட்லி கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக கம்பிவட(கேபிள்) செய்தி கூறுகிறது.

2005 ஆம் ஆண்டு மே மாதம் அருண் ஜெட்லி அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் ப்ளேக்கிடம் நடத்திய உரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.

இறப்புச் செய்தி

சின்னத்தெருவில் மர்ஹும் S.M. அபூபக்கர் அவர்களின் மகளாரும், A.குத்தூஸ் அவர்களின் மனைவியும், ஹாஜா, ஜமால் முஹம்மது, அஷ்ரப் அலி ஆகியோர்களின் சகோதரியும், பைஜல் முஹம்மது, ஹாஜா பக்ருதின், ஷபீக் அஹமது ஆகியோர்களின் தாயாருமான முஹம்மதா பேகம் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

Source: Mypno

இலவச நாப்கின்:தமிழர்களை கோமாளிகளாக்கும் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை


தமிழகத்தில் வருகிற ஏப்ரல்-13-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன.
தமிழகத்தின் முக்கிய இரு கட்சிகளான தி.மு.கவும்,அ.இ.அ.தி.மு.கவும் இலவசங்களை அள்ளி வீசி தங்களது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டன. தமிழர்களை சோம்பேறிகளாக்கும் அதேவேளையில் வேலை வாய்ப்பிற்கோ, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கோ எவ்வித அறிவிப்புகளும் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிலிருந்து ஃபாத்திமா முஸஃபர் நீக்கம்


இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் பெண்கள் பிரிவின் தலைவியும், அக்கட்சியின் அவை உறுப்பினருமான சகோதரி ஃபாத்திமா முஸஃபர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமைக்கு எதிராக மாற்றுக் கருத்து தெரிவித்து பிரச்சாரம் செய்ததால் அவர்மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. தொகுதிக்கான பங்கீடு நடந்தபொழுது ஆரம்பத்தில் 3 தொகுதிகளை முஸ்லிம் லீக்கிற்காக ஒதுக்கிய கலைஞர் கருணாநிதி பின்னர் தங்கள் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட பிரச்சனைகளை அடிப்படையாக வைத்து முஸ்லிம் லீக்கிற்கு வழங்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை திரும்பப் பெற்று கொண்டது. தி.மு.க வின் இந்த செயல்பாட்டை சிறிதும் கண்டிக்காத முஸ்லிம் லீக் தலைவர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொண்டது.  இதனால் பலருக்கும் அக்கட்சியின் மீது அதிருப்தியும் ஆத்திரமும் ஏற்பட்டது.

முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் – மக்கா இமாம்


முஸ்லிம்கள் பரஸ்பரம் ஐக்கியமாக செயல்படுவதில் அதீத கவனம் செலுத்த வேண்டுமென மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமின் தலைமை இமாம் அப்துல் ரஹ்மான் ஸுதைஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க இஸ்லாமிய கல்விக் கலாச்சாலையான தேவ்பந்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுற்றஷீதில் நேற்று ஜும்ஆ தொழுகைக்கு தலைமை வகித்து உரை நிகழ்த்தினார் மக்கா இமாம்.
அவர் தனது உரையில், இந்திய முஸ்லிம்கள் உலகிற்கு அளித்த நன்கொடைகள் மிகவும் மகத்துவமானது. இந்தியாவில் முஸ்லிம்கள் நூற்றாண்டுகளாக பாதுகாத்துவரும் மகத்தான மார்க்க உணர்வு அதி உன்னதமானது என இமாம் குறிப்பிட்டார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகைத்தந்த 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் நேற்றைய ஜும்ஆவில் பங்கேற்றனர்.

இஸ்லாமியருக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: ஜெ., புது வாக்குறுதி

கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்கள் இடம்பெறாத வகையில் திருத்தியமைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சி அமைத்தால், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தி அறிவிக்கப்படும். இஸ்லாமியர் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா பேசினார்.அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, நேற்று மாலை 5 மணிக்கு தன் இரண்டாம் நாள் பிரசாரப் பயணத்தை துவக்கினார். திருச்சி கருமண்டபம், புங்கனூர், ராம்ஜி நகர் மில் ஆகிய இடங்களில் அவர் பேசியதாவது: 

வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் கூட்டணி பலம் : கடலூர் மாவட்ட நிலவரம்


கடலூர் மாவட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பில் நெல்லிக்குப்பம் நீக்கப்பட்டு, நெய்வேலி உருவாக்கப்பட்டுள்ளது. மங்களூர் (தனி), திட்டக்குடி (தனி) தொகுதியானது. தற்போது மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி (தனி), புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) என, ஒன்பது சட்டசபை தொகுதிகள் உள்ளன.

கடலூர்: தி.மு.க.,வைச் சேர்ந்த அய்யப்பன் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதியில் பள்ளி வளர்ச்சிக்கும், கிராம சாலை மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளித்தார். பாதாள சாக்கடைத் திட்டப் பணி முடியாமல், புழுதி நகரமானதாலும்,

அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்துவோம்-சிரியா

 

தரா நகரத்தில் நடந்த மோதலில் நூற்றுக்குமேற்பட்ட மக்கள் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டதைத்தொடர்ந்து சிரியாவில் மக்கள் எழுச்சி கிளர்ந்தெழுந்துள்ள சூழலில் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.1963-ஆம் ஆண்டுமுதல் அமுலில் உள்ள அவசரச்சட்டத்தைக்குறித்து ஆராய்வோம் என அரசு உறுதியளித்துள்ளது.தராவில் கூட்டுப்படுகொலை நடத்தியவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம்.கைதுச்செய்யப்பட்டவர்களை விடுவிக்க அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் உத்தரவிட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த

காஸ்ஸாவின் மீதான தடையை ராணுவம் முடிவுக்குக்கொண்டுவரவேண்டும்-இஃவானுல் முஸ்லிமீன் கோரிக்கை


காஸ்ஸாவின் மீதான தடையை முடிவுக்குக்கொண்டுவர எகிப்தின் உயர் ராணுவ கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான இஃவானுல் முஸ்லிமீன் வலியுறுத்தியுள்ளது.மக்கள் விருப்பவாக்கெடுப்பை மதித்து புரட்சிக்கு ஆதரவளித்த ராணுவம் காஸ்ஸா விவகாரத்திலும், எகிப்து மக்களின் விருப்பத்திற்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென இஃவானுல் முஸ்லிமீனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காஸ்ஸா மக்களின் உயிரை ஆபத்திற்குள்ளாக்கும் தடையை முடிவுக்குக்கொண்டுவர

மாட்டின் தலை:ஆர்.எஸ்​.எஸ்ஸின் சதித்திட்ட​ம் – என்.சி.​ஹெச்.ஆர்.ஓ

மதுரையில் எஸ்.எஸ் காலனியிலுள்ள ஆர்.எஸ்.எஸ்ஸின் அலுவலக வளாகத்தில் மாட்டின் தலையை கண்டெடுத்த சம்பவம் கலவரத்தை உருவாக்குவதற்கான சங்க்பரிவாரின் சதித்திட்டம் என சந்தேகிப்பதாக உண்மைக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தைக் குறித்து க்ரைம் ப்ராஞ்ச் விசாரணை நடத்த வேண்டுமென நேசனல் கான்ஃபெடரேசன் ஆஃப் ஹியூமன் ரைட்ஸ் ஆர்கனைசேசன்(என்.சி.ஹெச்.ஆர்.ஓ) வலியுறுத்தியுள்ளது.

இம்மாதம் ஒன்றாம்தேதி ப்ளாஸ்டிக் பையில் பொதியப்பட்ட நிலையில் மாட்டின் அறுத்தெடுக்கப்பட்ட தலை ஆர்.எஸ்.எஸ் அலுவலக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது.

வெள்ளி, மார்ச் 25, 2011

வடிவேலு உங்களை தாக்கி பேசியிருக்கிறாரே? விஜயகாந்த் பதில்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் 24.03.2011 அன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விஜயகாந்த் பதில் அளித்தார்.

கேள்வி:  வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:  சூப்பராக இருக்கிறது. எனக்கு எந்த பயமும் இல்லை.

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (9, 10, 11)

ஒன்பதாவது சொற்பொழிவு

ஹிஜ்ரி எட்டு, ஜமாதுல் அவ்வலில், ஸிரியாவிலுள்ள மூத்தா என்ற இடத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதே சமயம் மதீனாவில் மஸ்ஜிதின் மிம்பரில் நின்றபடி நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய உரை:

‘ஜைது (ரளியல்லாஹு அன்ஹு) கொடி பிடித்தார், அவர் கொல்லப்பட்டார்.

பிறகு ஜாஃபர் (ரளியல்லாஹு அன்ஹு) அதைத்தாங்கி நின்றார்; அவரும் கொல்லப்பட்டார்.

விட்டுக்கொடுத்தால் விவாகரத்து தேவையில்லை!

[ திருமணம்பற்றி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தவழ்கிறோம், நடக்கிறோம், பேச ஆரம்பிக்கிறோம். அதுபோல திருமணம் என்பது இன்னும் ஒரு நிலை. அந்த நிலையில் பொறுப்புகள் வர வேண்டும். இருவரும் அடுத்தவரின் விருப்பம், அபிப்ராயம், ரசனை, வேலைப்பளு புரிந்து நடக்க வேண்டும்.]

திருமண உறவு முறிவது ஏன்? மணமுறிவு கேட்டு நீதிமன்றம் போவதன் பின்னுள்ள காரணங்கள் என்னென்ன? 

வியாழன், மார்ச் 24, 2011

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்: முலாயம் சிங் கோரிக்கை

நாடாளுமன்றத்திலும்,சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து,இன்று மக்களவையில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார்.

Ten Phrases That Lead to Success!

சிரியா:மஸ்​ஜிதுக்குள் அதிரடியாக நுழைந்து கொடூரமாக சுட்டுத் தள்ளிய ராணுவம் – 6 பேர் பலி


சிரியா நகரமான தராவில் பாதுகாப்பு படையினர் மஸ்ஜிதுக்குள் புகுந்து கொடூரமாக நடத்திய தாக்குதலில் 6 பேர் பலியாகியுள்ளனர்.
தராவிலுள்ள உமர் மஸ்ஜிதில் கடுமையான துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக அப்பகுதியைச் சார்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
தராவில் கடந்த சில தினங்களாக அரசு எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக நடந்துவருகிறது. ஆனால், போராட்டத்தின் பின்னணியில் ஆயுதம் ஏந்திய கும்பல் செயல்படுவதாக கூறுகிறது சிரியா அரசு.
அரசியல் சுதந்திரம்,ஊழலை ஒழித்தல் ஆகிய தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை மஸ்ஜிதிலிருந்து வெளியேறமாட்டோம் என எதிர்ப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில்தான் சிரியா பாதுகாப்புப் படையினர் மஸ்ஜிதுக்குள் புகுந்து அநியாயமாக சுட்டுத்தள்ளியது. கொல்லப்பட்டவர்களில் ஒரு டாக்டரும் உட்படுவார்.

‘ஓட்டுக்கு லஞ்சம்’ – பா​.ஜ.கவும், தனியார் சேனலும் திட்டமிட்டு விரித்த வலை? – அம்பலப்படுத்தியது தெஹல்கா


அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எம்.பிக்களுக்கு லஞ்சம் அளித்ததாக கூறும் விவகாரத்தை பா.ஜ.கவும், ஐ.பி.என் – சி.என்.என் தொலைக்காட்சி சேனலும் திட்டம் தீட்டி விரித்த வலை என டெஹல்கா வெளிக் கொணர்ந்துள்ளது.
விக்கிலீக்ஸ் வசமிருக்கும் அமெரிக்கா தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்கள் அடங்கிய இந்தியா தொடர்பான கேபிள் செய்திகளை ‘தி ஹிந்து’ பத்திரிகை வெளியிட்டு வருகிறது. இச்செய்தியில்தான் காங்கிரஸ் எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறது பா.ஜ.க.

இனி தமிழனுக்கு ஓ.சியில் உல்லாச வாழ்க்கை: கலைஞருக்கு சற்றும் சளைக்காத ஜெ.வின் தேர்தல் அறிக்கை


இலவசங்களை வழங்கியே  வாக்காளர்களை பரவசப்படுத்தும் பாணியை போட்டிப்போட்டுக் கொண்டு இந்தியாவிலேயே தமிழகத்தின் திராவிடக் கட்சிகள்தாம் கடைப்பிடித்து வருகின்றன.
இலவசங்களை அள்ளி வழங்கி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கலைஞருக்கு சற்றும் சளைக்காமல் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரான செல்வி.ஜெயலலிதாவும் தனது பங்கிற்கு இலவசங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டு தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.

புதன், மார்ச் 23, 2011

முஸ்லிம் சமுதாயம் அப்துல்லாஹ்வைத் தவறாகப் பயன்படுத்துகிறதா?

"பெரியார்தாசன் அப்துல்லாஹ்வாக மாறி ஓராண்டு ஆகிவிட்டது. அவர் இஸ்லாத்திற்கு வந்ததில் இருந்து இன்றுவரை அவர் முஸ்லிம்கள் மத்தியிலேயே ‘பிசி’யாக இருக்கிறார். இது அப்துல்லாஹ் என்கிற ஆளுமையின் தவறா? அல்லது அப்துல்லாஹ்வைத் தவறாகப் பயன்படுத்தும் முஸ்லிம் சமூகத்தின் தவறா? ஏனெனில் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) ஒரு போர்க்கருவி.

அந்தக் கருவியைப் பொதுக்களத்திலும், அறிவுத்தளத்திலும் பயனுள்ள வகையில் பயன்படுத்தாமல்

Sun News - 23 - 03 - 2011

இறப்புச் செய்தி

வாத்தியாப்பள்ளி, காயிதே மில்லத் நகரில் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த மர்ஹூம் சுல்தான் மெய்தின் அவர்களின் மகனாரும், பாவுஜி என்கிற முஹம்மது காசீம் அவர்களின் மாமனாரும், முஹம்மது அவர்களின் பாட்டனாருமாகிய ஷேக் அலாவுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 9 மணிக்கு நல்லடக்கம் வாத்தியாப்பள்ளியில்.


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

நன்றி: ismailpno

அரசியல் அதிகாரத்தை நோக்கி நம் சமூகம் – ஒரு பார்வை

தமிழகத்தின் அரசியல் சூடு பிடுத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. யார் எப்பொழுது என்ன முடிவுகளை அறிவிப்பார்கள் என்று தெரியாமல் ஒரு புறம் அரசியல் கட்சிகளும் மறுபுறம் அவர்களது ஆதரவாளர்களும் எப்ரல் 13 யை நோக்கி அசுர வேகத்தில் பயனிக்கின்றனர். இதற்கு முஸ்லிம் கட்சிகள் ஒன்றும் விதிவிளக்கல்ல இதனை பார்க்கும் பொழுது அனைத்து தரப்பிலும் ஒரு அரசியல் சுனாமி அடித்திவிட்டு செல்லும் என்றே தோன்றுகிறது. இதில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தனது நிலைப்பாட்டையும் அரசியல் கட்சிகளின் தொகுதி பங்கீடுகளையும் பல்வேறு பிரச்சனைக்ளுக்கு மத்தியில் ஒருவழியாக அறிவித்துவிட்டு நிம்மதி பெருமூச்சுவிட்டவர்களாக அரசியல் பிரச்சார களத்தை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

பெரும் எதிர்பார்ப்பு மற்றும் கட்சி பூசல்களை கடந்து திமுக கூட்டணியுடன் இணைந்து தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் 63 தொகுதிகளில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பூந்தமல்லி, ராமநாதபுரம், திருப்பூர் தெற்கு ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

MASJID SURVIVES IN JAPAN

ALLAHU AKBAR
 
THIS INCREDIBLE PICTURE WILL NEVER BE PUBLISHED IN THE ' WESTERN MEDIA '....(i put my head on the block , it will be overlooked).....only muslims will understand & appreciate 'the power of 'Allah'(SWT)...


                                                                      Thanks: Khalifa 
 

செவ்வாய், மார்ச் 22, 2011

இராஜஸ்தானில் முஸ்லிம் காவல்துறை அதிகாரி உயிருடன் எரித்துக் கொலை

ஜெய்பூர்:ராஜஸ்தானிலுள்ள சவை மதோபூர் மாவட்டத்தில் முஹம்மத் என்ற முஸ்லிம் காவல் அதிகாரியை  மீனா சமூகத்தைச் சார்ந்த கலவரக்காரர்கள் உயிரோடு தீவைத்து கொளுத்தி கொடூரமாக கொலைச் செய்தனர்.

இந்தச் சமூகம் பாரதீய ஜனதா கட்சியுடன் நட்பு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில் அந்த முஸ்லிம் அதிகாரியை கலவரக் கூட்டம் தாக்கும் போது உடன்வந்த மற்ற காவலர்கள்