செவ்வாய், மார்ச் 29, 2011

இந்தியாவில் ஊழலை ஒழிக்க அமெரிக்காவில் தண்டி யாத்திரை

1930-ஆம் ஆண்டு இந்தியாவில் காந்தியடிகள் தலைமையில் நடந்த தண்டி யாத்திரையை நினைவுக்கூறும் விதமாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மேற்கொண்ட 240 மைல் தூர பேரணி சான்ஃபிரான்சிஸ்கோவில் காந்தி சிலைக்கு அருகே நிறைவுற்றது.
‘இந்தியாவில் ஊழலை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து  ‘இரண்டாவது தண்டி யாத்திரை’ ஏற்பாடுச் செய்யப்பட்டதாக பேரணியின் அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.


கலிஃபோர்னியாவில் மார்டின் லூதர்கிங் நினைவு பார்க்கிலிருந்து கடந்த மார்ச் 12-ஆம் தேதி நிகழ்ச்சி துவங்கியது.பேரணி முடிவுறும் நாளில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆதரவு தெரிவித்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

‘இந்தியாவை காப்பாற்ற ஊழலை ஒழியுங்கள்’ எனக்கோரும் திறந்த மடல் ஒன்றை இவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: