வெள்ளி, ஏப்ரல் 22, 2011

இன்ஃபோஸிஸின் இஸ்லாமிய ஃபோபியா


ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸார் விசாரித்தார்கள் என குற்றஞ்சாட்டி இன்ஃபோஸிஸ் மென்பொருள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ராஷித் ஹுஸைனின் 3 ஆண்டுகால நீதிக்கான போராட்டம் வெற்றியடைந்துள்ளது.
தீவிரவாதி என குற்றஞ்சாட்டி விசாரணை நடத்திய போலீஸ் பின்னர் ராஷித் நிரபராதி என்பதை அறிந்து அவரை விடுதலைச் செய்தது. ஆனால், பணியில் சேர்க்கமாட்டோம் எனக் கூறிய இன்ஃபோஸிஸிற்கு எதிராக ராஷித் ஹுஸைனுக்கு கிடைத்த வெற்றி நீதிக்கான போராட்ட வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

குஜராத்:காந்திநகர் மாநகராட்சி தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.கவுக்கு தோல்வி


’வைப்ரண்ட் குஜராத்’ என்ற பெயரில் மோடி நடத்திய கூத்துக்கு சரியான பதிலடி காந்திநகர் மாநகராட்சித் தேர்தலில் கிடைத்துள்ளது.
அன்னா ஹஸாரே போன்றவர்கள் உண்மை நிலவரத்தை தெரியாமல் வளர்ச்சியின் நாயகன் என புகழ்ந்து தள்ளப்பட்ட மோடிக்கும் இத்தேர்தல் முடிவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அப்துல் நாஸர் மஃதனி:காலில்லாத ஒருவரை ஏன் சிறையிலடைக்கின்றீர்கள்? – உச்சநீதிமன்றம் கேள்வி


காலில்லாத ஒருவரை ஏன் சிறையில் அடைத்து வைத்துள்ளீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனி பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் பெயரால் கர்நாடகா மாநில பா.ஜ.க அரசால் கேரள மாநில இடதுசாரி அரசின் துணையுடன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

திங்கள், ஏப்ரல் 18, 2011

காஸாவில் இத்தாலி நிருபர் கொலை – ஹமாஸ் கண்டனம்


இத்தாலி நாட்டை சேர்ந்த விட்டோரியோ அரிகோனி (36) என்ற மனித உரிமை ஆர்வலர் பலஸ்தீனின் காஸாவில் இயங்கும் சிறிய தீவிரவாத குழு ஒன்றினால்  கடத்தப்பட்டு கொல்லபட்டுள்ளார் என்று ஹமாஸ் பாதுகாப்பு குழு தெரிவித்துள்ளது. இந்த கொலை சம்பந்தமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நால்வரை போலிஸ் காவலில் எடுத்து விசாரித்துவருகிறது.

முதல் மலேகான் குண்டுவெடிப்பு பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்: ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ


கடந்த 2006-ம் ஆண்டு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் மலேகானில் நடந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் பங்கினைக் குறித்த தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ அறிவித்துள்ளது.
ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அஸிமானந்தா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இது உறுதியானது என சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

Yaar Intha Poiyargal - Part - 2 Must See (Exclusive)

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

ஈரானின் மனிதாபிமானத்திற்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறது ஜப்பான்


கடந்த மாதம் ஜப்பானில் ஏற்ப்பட்ட பலத்த சுனாமி பேரலைகளாலும், பூகம்பத்தாலும் ஏற்ப்பட்ட பாதிப்பில் 28,000 – கும் மேற்பட்டோர் உயிர் இழந்ததும்,  பலர் காணாமல் போனதும் உலக மக்கள் அனைவரையும் மறக்க முடியாத சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த பேரழிவால் ஸ்தம்பித்து போன ஜப்பான் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் உலக நாடுகள் அனைத்தும் தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் பல வழிகளில்

ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் சேனல்


 ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை இஸ்ரேல் சேனலான 2 டி.வி நேற்று வெளியிட்டது.
நகாப் சிறையிலிருந்து கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு படம் பிடிக்கப்பட்டுள்ளன இவ்வீடியோ காட்சிகள். சித்தரவதையின் இறுதியில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. இக்காட்சிகளைத்தான் இஸ்ரேலிய சேனல் வெளியிட்டதாக குத்ஸ்னா செய்தி ஏஜன்சி தெரிவிக்கிறது.

சாய் பாபாவின் உடல்நிலை சீர்கெட காரணம் அவரது சீடர்களாம் – அறக்கட்டளை முன்னாள் பொருளாளர் குற்றச்சாட்டு


சாய்பாபா-தந்திரங்கள் புரிந்து மந்திரங்கள் என மக்களை ஏமாற்றி தன்னை கடவுளின் மனித அவதாரமாக சித்தரித்து வந்தவர். இன்று மருத்துவமனையில் படுத்த படுக்கையாக கிடக்கும் அளவுக்கு அவருடைய நிலைமை மோசமாகிவிட்டது.
தன்னைப் போன்றதொரு மனிதன் செய்யும் தகிடுதத்தங்களை புரிந்துக்கொள்ளும் ஆற்றலை இழந்துபோன சாய் பக்தர்கள் கோடிகளாக கொட்டி சாய்பாபாவை பணத்தால் மூழ்கடித்தனர். இன்று அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் கிடக்கும்பொழுது கூட பக்தர்களுக்கு அவர் மீதான பாசம் விட்டு அகலவில்லை போலும்.

லோக்பால் மசோதா:மக்கள் கருத்து ஆராயப்படும்


ஊழலை தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள லோக்பால் மசோதாவின் வரைவுத்திட்ட உருவாக்கம் குறித்து மக்களின் கருத்தை ஆராய மசோதா வரைவு கூட்டுக் குழுவின் முதல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லோக்பால் அமைப்பின் உறுப்பினர்களை நியமிக்கும் குழுவில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இடம்பெற வேண்டுமென்று அதன் முதல் வரைவுக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சனி, ஏப்ரல் 16, 2011

அமெரிக்காவி​ன் சதித்திட்ட​ம் குறித்து மத்திய கிழக்கு நாடுகள் எச்சரிக்கை​யுடன் இருக்கவேண்​டும் – அஹ்மத் நஜாத்

அமெரிக்காவும்,இஸ்ரேலும் இல்லாத புதிய மத்திய கிழக்கு உருவாகும் என எதிர்பார்ப்பதாக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சதித்திட்டம் காரணமாக மத்திய கிழக்கில் ஈரானி-அரபு மற்றும் ஷியா-சுன்னி ஆகிய பிரிவினை மோதல்கள் வெடித்துள்ள சூழலில் நஜாத் இக்கருத்தை வெளியிட்டுள்ளதாக ப்ரஸ் டி.வி தெரிவிக்கிறது.

பிரான்சின் புர்கா தடைக்கு தேவ்பந்த் கண்டனம்

பிரான்சின் புர்கா தடையை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என தாருல் உலூம் தேவ்பந்த் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு பிரான்சின் புர்கா தடைக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

வகுப்புவாதத்திற்கு நான் எப்பொழுதும் எதிரானவன்: ஹஸாரே

வகுப்புவாதத்திற்கு நான் எப்பொழுதுமே எதிரானவன்.நரேந்திர மோடியும், நிதீஷ்குமாரும் கிராமீயத்துறையில் ஏற்படுத்திய வளர்ச்சியை மட்டுமே புகழ்ந்தேன் என அன்னா ஹஸாரே தெரிவித்துள்ளார்.
மோடியை புகழ்த்திய அன்னா ஹஸாரேவின் நடவடிக்கையை கண்டித்து கடிதம் எழுதிய பிரபல நாட்டிய கலைஞர் மல்லிகா சாராபாய்க்கு எழுதிய பதில் கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார் ஹஸாரே.

டாக்டர் பினாயக் சென்னிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது

பிரபல மனித உரிமை ஆர்வலரும், மருத்துவருமான பினாயக்சென்னிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
முதல் நோக்கின் அடிப்படையில்(prima facie) தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் சென்னிற்கு நிபந்தனையற்ற ஜாமீனை அனுமதித்துள்ளது.

புதன், ஏப்ரல் 13, 2011

ஜெர்மனி:சர்ச்சுகளில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பலியான கொடுமை


ஜெர்மனியில் கிறிஸ்தவ சர்ச்சுகளின் கண்காணிப்பில் இயங்கும் அனாதை நிலையங்களில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பலியானதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.
ஜெர்மனி நாட்டைச்சார்ந்த இணையதளமான எ.ஆர்.டி இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இச்செய்தி ஜெர்மன் கிறிஸ்தவ சபைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் புர்காவுக்கு தடை இன்று முதல் அமுல்-போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் பெண்கள் கைது


பிரான்ஸ் நாட்டில் வலதுசாரி நிக்கோலஸ் சர்கோஸியின் அரசு முஸ்லிம் பெண்கள் புர்கா என அழைக்கப்படும் முகத்தை மறைப்பதை தடைச்செய்து பாராளுமன்றத்தில் சட்டமியற்றியது. இச்சட்டம் உலக முஸ்லிம் மக்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் சர்கோஸியின் அரசு இச்சட்டம் இன்று முதல் அமுலுக்கு வரும் என அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் திரிவது சுதந்திரமாம். முஸ்லிம் பெண்கள் சுயமாக எவ்வித நிர்பந்தமுமின்றி தங்களது கண்ணியத்தை காக்கும் நோக்கில் அணியும் புர்கா அடிமைச் சின்னமாம். சர்கோஸி அரசின் இந்த பாரபட்சமான கறுப்புச் சட்டத்திற்கு எதிராக கடந்த

மோடியை புகழ்ந்து சேற்றைவாரிப் பூசிக்கொண்ட அன்னா ஹஸாரே: காந்தியவாதிகள் கண்டனம்


குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் கிராம வளர்ச்சித் திட்டத்தை பாராட்டிய அன்னா ஹஸாரேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஊழல் புரியும் ஆட்சியாளர்களை விசாரிக்க ‘லோக்பால்’ மசோதாவை நிறைவேற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியவர் ஹஸாரே. இவரது போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்ந்த மத்திய அரசு ‘லோக்பால்’ மசோதாவை தயார்செய்யும் குழுவில் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடம் அளித்தது. இதன்மூலம் நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் புகழாரம் சூட்டப்பட்டார் ஹஸாரே.

திங்கள், ஏப்ரல் 11, 2011

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் வரை பதிலடி தொடரும்: ஹமாஸ்


காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவரை அந்நாட்டின் மீது ஏவுகணைகளை வீசுவதை தொடர ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் மஹ்மூத் அல் ஸஹர் போராளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் அரசை ஃபலஸ்தீன் ஒரு விதத்திலும் அங்கீகரிக்காது. ஆக்கிரமித்த ஃபலஸ்தீன் மண்ணிலிருந்து அவர்கள் வெளியேறும் வரை தற்காப்பு போர் தொடரும் என ஸஹர் தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்பு:அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க பா.ஜ.கவுக்கு யோக்கியதை இல்லை – தேவ கவுடா


ஊழலில் ஊறித்திளைத்த பா.ஜ.கவுக்கு ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க யோக்கியதை இல்லை என மத சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கேரளாமாநிலம் நெடும்பாஞ்சேரியில் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடியபோது அவர் இதனை தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலத்தில் சந்தோஷ் ஹெக்டேவின் தலைமையில் ஊழலை விசாரிக்கும் லோகாயுக்தாவுக்கு எதிராக தீவிரமாக களமிறங்கியது பா.ஜ.க கட்சி. அதைப்போல 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ஊழலின் வாசலை திறந்துவிட்டவர் பா.ஜ.க தலைவராகயிருந்த மறைந்த பிரமோத் மகாஜனவார்.

அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ்


:லோக்பால் மசோதா தொடர்பாக காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான அன்னா ஹஸாரேவின் ஜந்தர் மந்தர் போராட்டம் வெற்றிப்பெற்ற போதிலும் அவருடைய போராட்ட மேடையில் நிறைந்திருந்தது ஹிந்துத்துவாதிகளின் கூட்டமாகும்.
அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் துவக்கம் முதலே நடந்தது. மேடையை அலங்கரித்திருந்தது ஹிந்துத்துவா வாதிகளின் சின்னங்களும், முழக்கங்களுமாகும்.

சனி, ஏப்ரல் 09, 2011

சிரியா, பஹ்ரைன், எகிப்தில் பிரம்மாண்ட பேரணிகள்


டமாஸ்கஸ்/மனாமா/கெய்ரோ: அரசுக்கு எதிரான போராட்டங்கள் வழக்கமாக மாறியுள்ள சிரியாவிலும், எகிப்திலும், பஹ்ரைனிலும், எமனிலும் நேற்று பிரம்மாண்டமான கண்டன பேரணிகள் நடந்தன. ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு இந்நிகழ்ச்சிகள் நடந்தேறின.
சிரியாவில் பஸ்ஸார் அல் ஆஸாதின் ராஜினாமாவைக்கோரி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவத்தில் ஏழுபேர் கொல்லப்பட்டதாக அல்ஜஸீரா கூறுகிறது. காமிஸிலி, தெய்ரா ஸூர், டமாஸ்கஸ் ஆகிய இடங்களிலும் பிரம்மாண்டமான போராட்டங்கள் நிகழ்ந்தன. சாதாரண மக்கள், ப்ரொஃபசனல்கள், இஸ்லாமியவாதிகள், தேசீயவாதிகள், வயோதிகர், மாணவர்கள் உள்பட சமூகத்தின் அனைத்து பிரிவினரும் போராட்டங்களில் பங்கேற்றதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளுக்கு அஹ்மத் நஜாத் எச்சரிக்கை


வீழ்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக ஈரானுக்கும்,அரபு நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கெதிராக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் மேற்கு நகரமான கெர்மார்ஷாஹில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய நஜாத், அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளுக்கெதிராக ஆவேசமாக உரை நிகழ்த்தினார்.

மீண்டும் இஸ்ரேலின் வெறித்தாக்குதல்:6 ஃபலஸ்தீனர்கள் படுகொலை


காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய இரண்டு வெவ்வேறான தாக்குதல்களில் ஐந்து ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். நேற்று காலை கான் யூனுஸ் நகரத்தில் நடந்த விமானத் தாக்குதலில் இரண்டுபேர் இறந்துள்ளனர்.
ரஃபாவில் நடந்த இன்னொரு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக பிரஸ் டி.வி தெரிவிக்கிறது. ரஃபாவில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.இத்துடன் இரண்டு தினங்களிடையே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

எஸ்.டி.பி.​ஐயின் ஆதரவில்லாம​ல் எதிர்காலத்​தில் எவரும் ஆட்சியமைக்​க இயலாது – ராம் விலாஸ் பஸ்வான்


சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தலைமையிலான கூட்டணியின் ஆதரவில்லாமல் எவரும் கேரளாவில் ஆட்சியமைக்க இயலாது என முன்னாள் மத்திய ரெயில்வே துறை அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் அகில இந்திய தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் வேங்கரா சட்டமன்ற தொகுதியில் எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர் அப்துல் மஜீத் ஃபைஸியை ஆதரித்து நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியதாவது:

பிரஜாபதி கொலைவழக்கு சி.பி.ஐ விசாரணை நடத்தும் – உச்சநீதிமன்றம்


சொஹ்ராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய நேரடி சாட்சியான துளசிராம் பிரஜாபதியின் கொலைவழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத்ஷா குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இவ்வழக்கை சீர்குலைக்க குஜராத் போலீஸ் முயற்சி மேற்கொள்வதாக அளிக்கப்பட்ட புகார் மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் ஆறுமாதத்திற்குள்ளாக விசாரணையின் முன்னேற்றத்தைக் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நீதிபதிகளான பி.சதாசிவம், பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் வழங்கிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, ஏப்ரல் 08, 2011

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் பாகிஸ்தானிலிருந்து அல்ல, ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளிடமிருந்தாகும் – அன்னா ஹஸாரே


முழுமையான லோக்பால் மசோதா தாக்கல் செய்யக்கோரி சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹஸாரே ஜந்தர் மந்தரில் நடத்திவரும் சாகுவரையிலான உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியுள்ளது.இதனால் அவரது உண்ணாவிரதப் போராட்டம் நான்காவது நாளை எட்டியுள்ளது.
லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம் பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும். அரசில் நடக்கும் ஊழல்கள் பெருகி விட்டன. எனவே, மசோதா தயாரிப்பு குழுவில் 50 சதவீதம் பேர், பொதுமக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மேலும் அக்குழுவின் தலைவராக அன்னா ஹசாரே இருக்கவேண்டுமென்பது ஹசாரே தரப்பினரின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது.

கஷ்மீர் மசூதியில் குண்டுவெடிப்பு – ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலி


கஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஒரு மசூதியில் பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது.இதில் ஜாமியாத்-இ-அக்லே ஹதீஸ் அமைப்பின் தலைவர் பலியானார். பலர் காயமுற்றனர். இந்த குண்டுவெடிப்பிற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
ஸ்ரீநகரில் மைசூமா பகுதியில் பிரபல மசூதி உள்ளது.இங்கு வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தயாராகி கொண்டிருந்த நேரத்தில் பலத்த சப்தத்துடன் குண்டு மசூதிக்கு வெளியே வெடித்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பலரும் அதிர்ச்சியில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில் காயமுற்றவர்கள் முழு விவரம் இன்னும் போலீஸ் தரப்பில் வெளியிடப்படவில்லை.

உஸாமா பின்லேடனின் மகனை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஜார்ஜ் W புஷ்


அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனை சிக்கவைக்கும் கடைசி முயற்சியாக அவருடைய  மகன் உமரை முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ் வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.தனது பதவிகாலத்தின் இறுதிப் பகுதியில் புஷ் உமரை வெள்ளைமாளிகைக்கு அழைத்துள்ளார்.
தோஹாவில் வசித்துவரும் உஸாமா பின் லேடனின் நான்காவது மகனான உமரை 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இன்று துவக்கம்


கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துந்நாஸர் மஃதனி குற்றம் சாட்டப்பட்டுள்ள பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை இன்று துவங்குகிறது. கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 34-ஆம் எண் நகர சிவில் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும்.நீதிபதி ஹெச்.எல்.ஸ்ரீனிவாசன் வழக்கை பரிசீலிப்பார்.
வழக்கின் குற்றப்பத்திரிகை தொடர்பாக நடவடிக்கைகளை பூர்த்திச்செய்து விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் விசாரணை துவங்க காலதாமதமானது.
கடந்த 2008-ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் மரணித்தார்.20 பேருக்கு காயம் ஏற்பட்டது.இவ்வழக்கில் 32 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.அப்துல் நாஸர் மஃதனி உள்பட 19

ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய தலைவராக ஜலாலுத்தீன் உமரி மீண்டும் தேர்வு


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் இயக்கத்தின் தேசிய தலைவராக(அமீர்) மெளலானா ஜலாலுத்தீன் உமரி இரண்டாவது முறையாக தேர்வுச் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ஓக்லா அபுல் ஃபஸலில் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமையகத்தில் நடந்த தேசிய பிரதிநிதி சபை கூட்டத்தில் வைத்து ஜலாலுத்தீன் உமரி தேர்வுச் செய்யப்பட்டார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய தலைவராக தேர்வுச் செய்யப்பட்ட ஜலாலுத்தீன் உமரி தற்பொழுது மீண்டும் தேசிய தலைவராக தேர்வுச் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்:இர​ண்டாந்தர குடிமக்களா​க நடத்தப்படு​ம் முஸ்லிம்கள் ​- அவுட்லுக்​கின் அதிர்ச்சி ரிப்போர்ட்


வைப்ரண்ட் குஜராத்’ திட்டத்தின் பெயரிலான வளர்ச்சியின் ஆதாயம் முழுக்க ஹிந்துக்கள் மட்டும்தான் எனவும், குஜராத்தில் வாழும் முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவுட்லுக் வார இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அவுட்லுக்கின் ஏப்ரல் இதழில் -’குஜராத் ஒன் ஸைட் ஆஃப் டிவைட்’ என்ற பெயரில் பிரக்யா சிங் எழுதிய கட்டுரையில் குஜராத்தில் முஸ்லிம் எல்லா துறைகளிலும் பாரபட்சத்தை அனுபவிக்கும் சூழ்நிலைகள் புள்ளிவிபரங்களுடன் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தி.மு.க.- பா.ம.க. மோதல்: பிரச்சனையை சரிகட்டினார் வேட்பாளர்!


பரங்கிப்பேட்டை: சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., - பா.ம.க, நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், வேட்பாளரே நேரடியாகச் சென்று அதிருப்தியாளர்களை சரிக்கட்டினார்.  சிதம்பரம் தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் மூ.மு.க., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார். கடந்த, 1ம் தேதி, கொத்தட்டை கிராமத்தில், ஸ்ரீதர் வாண்டையார் ஓட்டு கேட்க சென்ற போது, தி.மு.க., சேர்மன் முத்து பெருமாள், பா.ம.க., நிர்வாகிகளை அறிமுகப்படுத்தவில்லை. இதனால், பா.ம.க.,வைச் சேர்ந்த காண்டீபன், தாமோதரனும் சேர்மன் முத்து பெருமாளை நெட்டித் தள்ளினர். தகவல் அறிந்த முத்து பெருமாளின் தம்பி, பா.ம.க.,வைச் சேர்ந்த முடிவண்ணன், 50க்கும் மேற்பட்ட தி.மு.க.,வினருடன் கொத்தட்டைக்குச் சென்று, காண்டீபன், தாமோதரனையும் தாக்கினர்.  இதில் இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து, 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.இப்பிரச்னையால் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு இடையே, "ஈகோ' தலை தூக்கியது. மேலும், கொத்தட்டை உட்பட சில இடங்களில் வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு ஓட்டு வங்கி

புதன், ஏப்ரல் 06, 2011

மேற்கு வங்காளம்:141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும்

மேற்குவங்காளத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகள் முஸ்லிம்களை கவருவதற்காக பல தந்திரங்களை மேற்கொள்ளும் வேளையில் 141 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் என கருதப்படுகிறது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் புள்ளிவிபரப்படி 141 தொகுதிகளில் 20 சதவீதத்திற்கும் அதிகமாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

போலி என்கவுண்டர்:பயன்படுத்திய ஆயுதங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் – மனித உரிமை கமிஷன்

கடந்த ஆண்டு கஷ்மீரின் மச்சில் பிரதேசத்தில் 3 இளைஞர்களை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய ராணுவத்தினரின் கைவசம் சட்டத்திற்கு புறம்பான ஆயுதங்கள் இருந்தனவா? என்பதுக் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென மாநில மனித உரிமை கமிஷன் வலியுறுத்தியுள்ளது.
அப்துல் ரஷீத் எம்.எல்.ஏ அளித்த மனுவைத் தொடர்ந்து மாநில மனித உரிமை கமிஷனின் உறுப்பினர் ஜுவைத் கவுஸ் விசாரணைக்கோரி மாநில அரசிற்கு சிபாரிசுச் செய்துள்ளார்.

கஷ்மீர்:பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறையிலடைக்கப்பட்ட சிறுவன் விடுதலை

கஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பொது பாதுகாப்புச் சட்டத்தின்படி(பி.எஸ்.எ) கைது செய்யப்பட்ட ஃபைஸான் ரஃபீக் என்ற சிறுவன் விடுதலைச் செய்யப்பட்டான்.
ரஃபீக்கை கத்வா சிறையிலிருந்து விடுவித்ததாக அவருடைய தந்தை ரஃபீக் அஹ்மத் ஹகீம் தெரிவித்துள்ளார். சிறுவனை பி.எஸ்.எ சட்டத்தின் கீழ் கைது செய்தது கஷ்மீரில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:ஆர்.எஸ்.எஸ்ஸும், அஸிமானந்தாவும் தப்பிக்கவியலாது

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட குண்டுவெடிப்பு வழக்குகளில் அளித்த வாக்குமூலத்தை ஹிந்துத்துவா பயங்கரவாதி அஸிமானந்தா வாபஸ் பெற்றாலும் நீதிமன்றம் அதனை ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும் என கருதப்படுகிறது.
வழக்கில் குற்றவியல் நடவடிக்கை சட்டம் 154-பிரிவின்படி மாஜிஸ்ட்ரேட் முன்பு முன்னர் அளித்த வாக்குமூலத்திலிருந்து வாபஸ் பெறுவது அவ்வளவு எளிதானல்ல என சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், ஏப்ரல் 05, 2011

யெமன்:17 பேரை அநியாயமாக சுட்டுக்கொன்ற ராணுவம்

யெமனில் தெற்கு நகரமான தாஇஸில் அரசு எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துவரும் ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தாஇஸ் ஆளுநரின் தலைமையகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர்

அஸ்ஸாமில் முதல் கட்ட வாக்குப்பதிவு 66 சதவீதம்

அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவில் 66.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சதவீதத்தில் மாற்றம் வரலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவின் உண்மை நிலவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரியவரும். வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. இரண்டு வாக்குச் சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்படும்.
126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 62 தொகுதிகளில் நடைபெற்றது.

திங்கள், ஏப்ரல் 04, 2011

புனித பயணம் மேற்கொள்வோர் ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீட்டுக்கு காத்திருக்காமல் பாஸ்போர்டிற்கு விண்ணப்பிக்கலாம்


ஹஜ் பயணம் மேற்கொள்வோர், அக்கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ என, சென்னை மண்டல துணை பாஸ்போர்ட் அதிகாரி தவ்லத் தமீம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வோர், கடைசி நேர நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள், தங்கள் விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் ஹஜ் பயணி என, சிவப்பு மையால் குறிப்பிட்டு, வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் பாஸ்போர்ட் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

முஸ்லிம் விரோத இடதுசாரிகளுக்கு ஆதரவா?-ஜமாஅத்தே இஸ்லாமியின் முக்கிய தலைவர் விலகல்


சிறுபான்மை விரோத இடதுசாரிகளுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமியின் அரசியல் பிரிவு செயலாளர் ஹமீத் வாணிமேல் அவ்வமைப்பை விட்டு வெளியேறியுள்ளார்.அகில இந்திய பிரதிநிதி, மாநில செயற்குழு உறுப்பினர், ஷூரா(கலந்தாலோசனை) உறுப்பினர் உள்பட அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார் அவர்.
தனது பதவிகளை ராஜினாமா செய்தது குறித்து அவர் கூறியதாவது:கடந்த ஐந்து வருட கால இடதுசாரிகளின் ஆட்சியை சரியாக மதிப்பீடு செய்யாமல் வருகின்ற கேரள

ஞாயிறு, ஏப்ரல் 03, 2011

எஸ்.டி.பி.​ஐ, ம.ம.க, தி.மு.க கூட்டணி வேட்பாளர்க​ளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆதரவு


வருகின்ற தமிழக-புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.
இதுக்குறித்து அவ்வியக்கத்தின் தமிழக தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு கிடைக்க பாடுபடுவது, முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலைச்செய்ய பாடுபடுவது, வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்த பாடுபடுவது,

‘சேவா’ தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்புவாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றார் மோடி – விக்கிலீக்ஸ்


குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி ”சேவா (Self Employed Women’s Association)” என்ற பெண்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை வகுப்பு வாத பிரச்சாரத்திற்கு உபயோகிக்க முயன்றதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.’சேவா’ வின் பொதுச்செயலாளர் ரீமா பென் நானாவதி மும்பையில் அமெரிக்க தூதரக அதிகாரி மைக்கேல் எஸ் ஓவனிடம் இதனை தெரிவித்துள்ளார். இச்செய்தியை ஓவன் கடந்த 2005-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி வாஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார்.

ஆப்கானில் தாலிபான் அதிரடி


ஆப்கானிஸ்தானின் வட-கிழக்கு மாகாணத்தில் தாலிபான் புரட்சியாளர்கள் அப்பகுதியின் காவல்காரர்களின் தடையை மீறி திடீர் என்று அதிரடி கிளர்ச்சியை ஏற்படுத்தியதாக அப்பகுதியின் உயர் காவல் அதிகாரி ஷம்சுர் ரஹ்மான் ஜாகித் தெரிவித்தார். அங்கே நடந்தவைகளைப் பின்வருமாறு விளக்குகிறார்.
“300க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய தாலிபான் புரட்சியாளர்கள் ஆப்கானிஸ்தானின் வேஹல்

தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐக்கு கிடைக்கும் வாக்குகள் வெற்றித்தோல்வியை நிர்ணயிக்கும்


தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் முதன்முதலாக தேர்தல் களத்தில் தடம் பதித்துள்ள சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவுக்கு கிடைக்கும் வாக்குகள் அத்தொகுதியில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்குமென அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தி.மு.க, அ.இ.அ.தி.மு.க கூட்டணிகளில் சேராமல் தனித்து பலப்பரீட்சைக்கு களமிறங்கியுள்ளது எஸ்.டி.பி.ஐ.
கடந்த பெப்ருவரி மாதம் சென்னையில் நடந்த கட்சியின் சென்னை மண்டல மாநாட்டில் திரண்டிருந்த மக்கள் வெள்ளம் அரசியல் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இரண்டாவது முறையாக உலகச் சாம்பியன் ஆனது இந்தியா!


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது  முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.
மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வென்று சாம்பியன் ஆனது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஒவர்களில் 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் துவக்கத்தில் சிறிது சொதப்பினாலும் பின்னர் ஆடிய கவுதம், ஹோளி, மற்றும் டோனி ஆகியோர் சிறப்பாக ஆடி 48.2 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

சனி, ஏப்ரல் 02, 2011

மேலும் இரண்டு அமைச்சர்கள் கத்தாஃபியை கைவிட்டனர்


வெளியுறவுத்துறை அமைச்சர் மூஸா குஸாவைத் தொடர்ந்து மேலும் இரண்டு அமைச்சர்கள் கத்தாஃபியை கைவிட்டனர்.இதனால் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார் கத்தாஃபி.
ரகசிய புலனாய்வுத்துறை அமைச்சர், வெளியுறவு துணை அமைச்சர், சபாநாயகர் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமாச் செய்துவிட்டு துனீசியாவுக்கு சென்றுள்ளனர்.
எண்ணெய் வளத்துறை அமைச்சர் ஷுக்ரி கானிம் ராஜினாமா செய்ததாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். நாட்டைவிட்டு வெளியேறமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

யெமன்:பத்துலட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி


 32 ஆண்டுகளாக ஆட்சியில் தொடரும் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகக்கோரி ஸன்ஆவில் எதிர்ப்பாளர்கள் பத்து லட்சம்பேர் திரண்ட பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
ஸன்ஆவை தவிர கிராமங்களிலும் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மக்கள் வீதியில் இறங்கினர். தலைநகரின் பெரும்பாலான மஸ்ஜிதுகளை பூட்டிவிட்டு இமாம்களும், பொதுமக்களும் ஸன்ஆ பல்கலைக்கழக மைதானத்தில் ஜும்ஆ தொழுகையை நடத்தினர். பின்னர் பேரணி துவங்கியது.
ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் போராட்டத்தில் முதன்முறையாக இத்தகையதொரு நிகழ்வு நடந்தேறியுள்ளது.நகரம் முழுவதும் மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது. வீதிகள் நிறைந்து வழிந்தன.