வெள்ளி, ஏப்ரல் 22, 2011

குஜராத்:காந்திநகர் மாநகராட்சி தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.கவுக்கு தோல்வி


’வைப்ரண்ட் குஜராத்’ என்ற பெயரில் மோடி நடத்திய கூத்துக்கு சரியான பதிலடி காந்திநகர் மாநகராட்சித் தேர்தலில் கிடைத்துள்ளது.
அன்னா ஹஸாரே போன்றவர்கள் உண்மை நிலவரத்தை தெரியாமல் வளர்ச்சியின் நாயகன் என புகழ்ந்து தள்ளப்பட்ட மோடிக்கும் இத்தேர்தல் முடிவு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் கையாலாகததனத்தால் குஜராத் மாநிலம் 1995-ஆம் ஆண்டிற்கு பிறகு பா.ஜ.கவின் கைவசம் சென்றது. பின்னர் நரேந்திரமோடி பா.ஜ.கவின் முதல்வராக பதவியேற்றார். குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மாநிலம் முழுவதும் அரசுத் துறைகளில் பரவலாக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கான வெறுப்பு ஆழமாக விதைக்கப்பட்டது. இதன் விளைவாக கடந்த 2002-ஆம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பை காரணங்காட்டி மோடி தலைமையில் சங்க்பரிவார பயங்கரவாதிகள் இந்திய வரலாற்றிலேயே கொடூரமான தாக்குதலை நிரபராதிகளான அப்பாவி முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துவிட்டு ஆயிரக்கணக்கான மக்களை கொடூரமாக கொலைச் செய்தனர். பல பெண்கள் படுகொடூரமாக வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர்.
குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையை மறைக்க மோடி போட்ட திட்டம்தான் ‘வைப்ரண்ட் குஜராத்’. மோடியின் மோசடிக்கு உரிய பதிலடி தற்பொழுது காந்திநகர் மாநகராட்சி தேர்தலில்(GMC) கிடைத்துள்ளது.
மொத்தம் 33 சீட்கள் (11 வார்டுகள்- ஒரு வார்டுக்கு 3 சீட்கள்) கொண்ட இந்த நகராட்சியின் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 18 இடங்களை வென்று நகராட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ் கட்சி. பாஜகவுக்கு 15 இடங்கள் கிடைத்தன.
5 வார்டுகளில் காங்கிரஸ் மொத்த சீட்களையும் வென்றது. 7வது வார்டில் 2 சீட்களையும், 9வது வார்டில் 1 சீட்டையும் வென்றது காங்கிரஸ். குஜராத் காங்கிரஸ் தலைவராக முதல் முறை பொறுப்பேற்ற அர்ஜூன் மோத்வாடியாவுக்கு இது மிகப் பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் வெற்றியைக் குறித்து கருத்துத் தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் நர்ஹரி அமீன் கூறுகையில், “காந்திநகர் மக்கள் மோடி அரசுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி 2011 ஆம் ஆண்டை மாநில தலைநகரான காந்திநகரில் வெற்றிக்கொடியை ஏற்றிவிட்டு துவங்கியுள்ளது” என்றார்.
தேர்தல் முடிவுகள் குறித்து மோடி இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை: