வியாழன், மார்ச் 31, 2011

லிபியா:எதிர்ப்பாளர்களுக்கு மேலும் பின்னடைவு


எதிர்ப்பாளர்களிடமிருந்து மேலும் நகரங்களை மீட்டுவரும் கத்தாஃபியின் ராணுவம் நேற்று முக்கிய எண்ணெய் நகரமான ராஸ் லனூஃபை கைப்பற்றியுள்ளது.
நேற்று முன்தினம் கத்தாஃபியின் ராணுவம் பின் ஜவாத் நகரத்தை மீட்டது குறிப்பிடத்தக்கது. பிராந்தியத்தில் மோதல் தொடர்வதாக செய்திகள் கூறுகின்றன.
ஆயுதங்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பது தெரியாத காரணத்தினால் எதிர்ப்பாளர்கள் தோல்வியை சந்திக்க வேண்டியுள்ளது. இவர்கள் கிழக்கு நகரங்களை நோக்கி செல்கின்றனர். எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதம் வழங்குவதை புறக்கணிக்க இயலாது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

லிபியாவில் மேலும் தீவிரமான தாக்குதல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பெங்காசிக்கு அமெரிக்காவும், பிரான்சும் பிரதிநிதிகளை அனுப்புகின்றன. எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார். நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் ஐந்து லிபிய தூதரக பிரதிநிதிகளை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளதாக ஹேக் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தி லிபியாவின் பிரச்சனைக்கு பரிகாரம் காணலாம் என்ற முயற்சியிலிருந்து விடுபட வேண்டுமென சீனாவின் அதிபர் ஹூ ஜிண்டாவோ பிரான்சிடம் வலியுறுத்தியுள்ளார்.
கத்தாஃபிக்கு அபயம் அளிக்க தயார் என உகாண்டா அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேற்கத்திய படைகளின் தாக்குதலால் கத்தாஃபியின் ராணுவம் பலமிழந்துள்ளதாகவும், அவர் உடனடியாக ராஜினாமாச் செய்யவேண்டுமெனவும் ஒபாமா கடந்த செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார்.
ஸிர்த்தில் பிரிட்டீஷ் ராணுவம் நேற்று தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. பிரான்சும், கத்தரும் இத்தாக்குதலில் கூட்டு சேர்ந்துள்ளன.
இதற்கிடையே,அஜ்தாபியில் எதிர்ப்பாளர்கள் மீண்டும் தாக்குதல் தொடுக்க முயல்வதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. லிபியாவில் ஆயுதங்களை விநியோகிக்க ஐ.நாவின் தீர்மானம் அனுமதியளித்துள்ளதாக லண்டனில் லிபியாவின் விவகாரத்தைக் குறித்து விவாதிக்க கூடிய கூட்டத்தில் ஹிலாரி கிளிண்டனும், வில்லியம் ஹேக்கும் கூறியிருந்தனர்.

கருத்துகள் இல்லை: