செவ்வாய், மார்ச் 29, 2011

அமெரிக்க உளவாளிகளை பிடிக்க தாலிபானின் புலனாய்வுக் குழு


ஆளில்லா விமானத் தாக்குதல்(ட்ரோன்) நடத்துவதற்கு அமெரிக்காவிற்கு ரகசிய தகவல்களை பரிமாறும் உளவாளிகளை கண்டறிய பாகிஸ்தானின் வடக்கு பகுதியான வஸீரிஸ்தானில் தாலிபான்கள் தனியாக புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளனர்.

லக்‌ஷர்-இ-குராஸான் என்ற பெயரிடப்பட்ட இக்குழுவினருக்கு, உளவாளிகளை கைது செய்து மரணத்தண்டனை விதிக்க தாலிபான் அதிகாரம் வழங்கியுள்ளதாக எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.


புலனாய்வுக் குழுவில் எத்தனை பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால், ஏறத்தாழ 300 பேர் இந்த நோக்கத்திற்காக செயல்படுவதாக அப்பகுதி வட்டாரங்களை மேற்கோள்காட்டி எக்ஸ்பிரஸ் ட்ர்ப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ட்ரோன் தாக்குதல் வழக்கமாக நடைபெறும் தத்தாவேல், மிரம்ஷாஹ், மிர் அலி ஆகிய பகுதிகளில் தாலிபானின் புலனாய்வுக்குழு முக்கியமாக செயல்படுகிறது.

கடந்த ஆண்டு இக்குழுவினர் செயல்படத் துவங்கினர். துவக்கத்தில் இக்குழுவிற்கு பின்னடைவு ஏற்பட்ட போதிலும் பின்னர் திறம்பட செயல்படுவதாக இப்பகுதியில் செயல்படும் ஹக்கானி நெட்வர்க்கை சார்ந்த நபர் ஒருவர் கூறுகிறார்.

லஷ்கர்-இ-குரஸான் செயல்படுவதை ராவல் பிண்டியில் பாகிஸ்தான் ராணுவ தலைமையக அதிகாரி உறுதிச் செய்துள்ளார். இக்குழுவின் சட்டத்திட்டங்கள் குறித்து தகவல்கள் ஏதும் இல்லை.

கருத்துகள் இல்லை: