திங்கள், மார்ச் 28, 2011

காஸ்ஸாவில் இஸ்ரேல் விமானத்தாக்குதல்: இரண்டு பேர் பலி

ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் நேற்று இஸ்ரேலிய ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். மூன்று பேருக்கு காயமேற்பட்டது.

ஜபலியாவின் கிழக்கு பகுதியில் தாக்குதல் நடந்ததாக காஸ்ஸா எமர்ஜென்சி சர்வீஸ் செய்தித் தொடர்பாளர் ஆதம் அபூஸென்மியா அல்ஜஸீராவிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் தங்களுக்கு எதிராக ராக்கெட் தாக்குதல் நடத்த
திட்டமிடும்பொழுது வடக்கு காஸ்ஸாவில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறுகிறது.

அல்குத்ஸ் ராணுவ பிரிவைச் சார்ந்த தங்களின் ராணுவத்தினர்தாம் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்லாமிக் ஜிஹாத் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: