ஞாயிறு, மார்ச் 20, 2011

பரங்கிப்பேட்டையில் அரசியல் கட்சிக் கொடிகள் அகற்றம்

 பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அரசியில் கட்சி கொடி கம்பங்களில் இருந்த கொடிகளை தேர்தல் நடத்தை விதி கண்காணிப்பு குழுவினர் அகற்றினர். சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 13ம் தேதி நடப்பதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் விதிமுறைகளை அரசியல் கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்தும் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் பெரும்பாலான இடங்களில் அரசியல் கட்சி கொடிகம்பங்களில் கட்சி கொடிகள் பறந்து கொண்டிருந்தது.


அதனால் 19ம் தேதி சிதம்பரம் தொகுதி தேர்தல் நடத்தை விதி கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் திருநாவுக்கரசு, துரைசாமி, சந்திரகாசன் ஆகியோர் பரங்கிப்பேட்டை, கிள்ளை, வண்டிகேட், பு.முட்லூர் உட்பட 41 ஊராட்சிகளில் உள்ள அரசியில் கட்சி கொடி கம்பங்களில் இருந்த கட்சி கொடிகளை அகற்றினர். மேலும் அரசியல் கட்சியினரை கொடி கம்பங்களில் வெள்ளை அடிக்கவும் கேட்டுக் கொண்டனர். தேர்தல் விதிமுறைகளை மீறி கொடி கம்பங்களில் வெள்ளை அடிக்காத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். பரங்கிப்பேட்டையில் உள்ள மனிதநேய மக்கள் கட்சி 18ம் தேதி அரசு மருத்துவமனை அருகில் இருந்த அக்கட்சி கொடி கம்பங்களில் வெள்ளை அடித்தனர்

கருத்துகள் இல்லை: