சனி, ஏப்ரல் 02, 2011

அஸிமானந்தாவுக்கு எதிரான வழக்குகளை நிரூபிக்க முடியும்: ப.சிதம்பரம்..


மக்கா மஸ்ஜித் உட்பட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளியான சுவாமி அஸிமானந்தாவிற்கு எதிரான வழக்குகளை நீதிமன்றத்தில் நிரூபிக்க தேசிய புலனாய்வு ஏஜன்சியால்(என்.ஐ.ஏ) முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அஸிமானந்தா குண்டுவெடிப்பு வழக்கில் பல்டியடித்தது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் ப.சிதம்பரம் இதனை தெரிவித்தார்.
அஸிமானந்தா கிரிமினல் வழக்கில் குற்றவாளி என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.அவரைவிட நம்பத்தக்கது தேசிய புலனாய்வு ஏஜன்சியாகும்(என்.ஐ.ஏ) என ப.சிதம்பரம் தெரிவித்தார்.

பயங்கரவாத வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டு மாஜிஸ்ட்ரேட் முன்பு வாக்குமூலம் அளித்திருந்த அஸிமானந்தா, சில தினங்களுக்கு முன்பு அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு வழக்கில் தன்னை சாட்சியாக இணைத்ததை தள்ளுபடிச் செய்ய வேண்டுமெனக்கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புலனாய்வு அதிகாரிகளின் நிர்பந்தம் மூலமாக வாக்குமூலம் அளித்ததாக பல்டியடித்திருந்தார்.

கருத்துகள் இல்லை: