திங்கள், ஆகஸ்ட் 15, 2011

வன்முறையாளர்களை விரட்டியடிக்க பிரிட்டனுக்கு அமெரிக்க வல்லுநர் உதவி

ஐந்து தினங்களாக பிரிட்டீஷ் அதிகாரிகளை பதட்டத்தின் முனையில் நிறுத்திய லண்டன் வன்முறையாளர்களை எதிர்கொள்ள பிரதமர் டேவிட் காமரூன் அமெரிக்க குற்றவிசாரணைப் பிரிவு தலைவரின் உதவியை நாடியுள்ளார்.
நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், போஸ்டன் ஆகிய அமெரிக்க நகரங்களில் போலீஸ் தலைவராக பதவி வகித்த வேளையில் வன்முறையாளர்களை கட்டுப்படுத்திய அனுபம் மிக்க பில் ப்ராட்டனின் தலைமையிலான குழு அடுத்த மாதம் காமரூனுடன் சந்திப்பை நடத்தும்.
ஆங்கிலேய நகரங்களை உலுக்கிய பிரச்சனை சமூகத்தை மொத்தமாக பாதிக்கும் என ப்ராட்டன் கூறுகிறார். ஏராளமான நபர்களை போலீசாரால் கைதுச்செய்ய முடிந்தபோதும் பிரச்சனைக்கு உண்மையான தீர்வு காண முடியவில்லை என அவர் தெரிவித்தார். அதேவேளையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எதிர்கொள்வதில் வீழ்ச்சி ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்படும் போலீஸாரின் நிதியுதவியை வெட்டிக்குறைக்க மறுபரிசீலனை செய்யமாட்டோம் என சான்ஸ்லர் ஜார்ஜ் ஓஸ்போன் தெரிவித்துள்ளார். போலீஸ் துறையில் முழுமையான் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
சமூக பிரச்சனைகளில் பரிகார நெறிமுறை கட்டளைகளை ப்ராட்டனிடமிருந்து பெறப்படும். ஆனால் ப்ராட்டனின் நியமனத்தில் போலீஸ் பெடரேசன் அதிருப்தியை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உபதேசம் உதவும் என தோன்றவில்லை என மெட்ரோபாலிடன் போலீஸ் ஃபெடரேசன் தலைவர் ஜான் டுல்லி தெரிவித்துள்ளார். ப்ராட்டனின் நியமனம் நீண்டகாலத்திற்கு இல்லை என அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: