ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011

அரசியல் தரகு வியாபாரி சுப்ரமணிய சுவாமியை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய மத்திய மாநில அரசுகளுக்கு SDPI மாநிலத் தலைவர் கோரிக்கை

நாட்டில் சமூகங்களிக்கிடையே கலவரத்தையும் பிளவையும் ஏற்படுத்தும் வகையில் கட்டுரை வெளியுட்டுள்ள, அரசியல் தரகு வியாபாரி சுப்ரமணிய சுவாமியை தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். மத்திய மாநில அரசுகளுக்கு SDPI மாநிலத்தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுக் குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அண்மையில் மஹாராஷ்டிராவிலிருந்து வெளிவரும் DNA (Daily News and Analysis)  செய்தித்தாளிலும், இணையதளத்திலும் அரசியல் வியாபாரி சுப்ரமணிய சுவாமியால் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் முஸ்லிம்களுக்கெதிராக அவதூறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டதோடு, நாட்டு மக்களை பிளவுபடுத்தும் விதத்திலும் , பெரும் மதக்கலவரத்திற்கு தூபம் போடும் விதத்திலும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் அக்கட்டுரையில் எழுதியுள்ளார்.
பல அரசியல் குழப்பங்களுக்கு காரணமான சுப்ரமணிய சுவாமி சமூகங்களுக்கு மத்தியில் குழப்பம் ஏற்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்தவேண்டும்.
சுப்ரமணிய சுவாமி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று கோவையிலும், மதுரையிலும் SDPI ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. வரும் ஆகஸ்ட் 8 ல் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: