ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி: மூ.மு.க. அறிவிப்பு



 

 நில அபகரிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி உள்ளிட்டோரை ஸ்ரீதர் வாண்டையார் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
பின்னர்  ஸ்ரீதர் வாண்டையார் செய்தியாளர்களிடம் கூறியது:
உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவோம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
முதல்வர் ஜெயலலிதா தி.மு.க. தலைவர்களையும் முன்னாள் அமைச்சர்களையும் கைது செய்து சிறையில் அடைப்பதை விட்டுவிட்டு, நாட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் அக்கறை காட்ட வேண்டும் என்றார் வாண்டையார்.
முன்னாள் அமைச்சர்கள் சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களை, வெள்ளிக்கிழமை பிற்பகல் முன்னாள் அமைச்சர்கள் பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, சற்குண பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் உள்ளிட்டோரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.

கருத்துகள் இல்லை: