செவ்வாய், செப்டம்பர் 20, 2011

அபினவ் பாரத் மற்றும் சனாதன் சஸ்தாவை தடைச் செய்ய மகாராஷ்டிரா போலீஸ் கோரிக்கை

தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் இரண்டு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளான சனாதன் சஸ்தா மற்றும் அபினவ் பாரத் ஆகிய அமைப்புகளை தடைச்
செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா போலீஸ் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா குண்டுவெடிப்பில் சனாதன் சாஸ்தாவின் பங்கு நிரூபணம் ஆனது மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் அபிநவ் பாரத்தின் பங்கு அம்பலம் ஆனது.
லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த ப்ரோகித், அஜய் ரஹீர்கர், ரமேஷ் உபாதை மற்றும் சம்மர் குல்கர்னி ஆகிய அபினவ் பாரத்தின் உறுப்பினர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டுவெடிப்பில் மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவு மற்றும் சிபிஐ யால் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் என்று தெரியவந்தது.
அதேபோல் சனாதன் சாஸ்தாவின் பதினோரு உறுப்பினர்கள் கோவா குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டிருப்பதை தேசிய புலானாய்வுக் குழு கண்டறிந்தது.
மகாராஷ்டிரா போலீஸின் இந்த நடவடிக்கை இம்மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவிக்கையில், இவ்வமைப்புகள் தடைச் செய்யப்படுவது குறித்து விசாரணை நடந்து வருகிறது. எனினும் தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து அபினவ் பாரத் மற்றும் சனாதன் சாஸ்தாவை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் தடை செய்யக்கோரி மகாராஷ்டிரா காவல்துறை பரிந்துரை செய்ததாகவும் கூறியுள்ளார்.
குண்டுவெடிப்பில் தொடர்புடைய இவ்வமைப்புகளுக்கு எதிராக அரசின் நடவடிக்கை என்ன என்றும் இவ்வமைப்புகள் தடை செய்யப்படுமா என்றும் கேட்கப்பட்டதற்கு பதிலளித்துள்ள அமைச்சர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் இதுவரை எந்த குறிப்பிட்ட அமைப்பின் செயலும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவாமி அசீமானந்,தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.
தேசிய புலனாய்வுக் குழு இம்மூன்று வழக்கிகளிலும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. 2006 மாலேகான் குண்டு வெடிப்பில் மும்பை தீவிரவாத தடுப்பு பிரிவும், சிபிஐ-யும் சிமி மீது குற்றம் சாட்டினர். ஆனால் சுவாமி அசீமானந்த் மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையது தங்கள் அமைப்புதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததால் இவ்வழக்கு தேசிய புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: