சனி, அக்டோபர் 29, 2011

13வாக்குகள் பெற்று து. தலைவரானார் நடராஜன்!


பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் துனை தலைவர் தேர்தல் இன்று காலை 10 மணிக்கு பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக, து. தலைவர் வேட்பாளாராக 15-வது வார்டு உறுப்பினர் கணேசன் மற்றும் 17-வது வார்டு உறுப்பினர் நடராஜன் ஆகியோர் வேட்புமனு செய்தனர்.

இதில் 18 வார்டு உறுப்பினாகள் மற்றும் பேரூராட்சித் தலைவர் உட்பட மொத்தம் 19 வாக்குகளில் 18 வாக்குகள் பதிவானது. 4-வது வார்டு உறுப்பினர் தர்மபிரகாஷ் தேர்தலில் வாக்கு அளிக்கவில்லை.

பதிவான 18 வாக்குகளில் 13 வாக்குகள் பெற்று நடராஜன் வெற்றி பெற்றார். கணேசன் 5 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் நடராஜன் துணைப் பேரூராட்சித் தலைவராக தேர்தல் அதிகாரியும் செயல் அலுவலருமான திருமதி. ஜீஜாபாயால் அறிவிக்ப்பட்டார்.


source: Mypno


கருத்துகள் இல்லை: