செவ்வாய், அக்டோபர் 25, 2011

பரங்கிப்பேட்டை பேரூராட்சி பதவியேற்பு நிகழ்ச்சி



பரங்கிப்பேட்டை: தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றபெற்ற தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பதவியேற்ப்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுகின்றது.
 
 









 
இன்று காலை 10:30 மணியளவில் பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் வெற்றி பெற்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ஜீஜாபாய் அவர்கள் பதவிபிராமணம் செய்து வைத்தார்.பேரூராட்சி மன்ற தலைவராக முஹம்மது யூனுஸ் அவர்கள் பதவியேற்று கொண்டார் அதனையெடுத்து உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் காவல்துறை ஆய்வாளர், வக்கீல்கள் மற்றும் முஸ்லிம் மற்றும் மாற்ற மத சமுதாய பிரமுர்கள் ஏரளமானேர் கலந்து கொண்டனர்.

இதனிடையே பதவியேற்ப்பு விழா நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஜெகநாதன் தலைமையில் 8-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற அருள்முருகன் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டி திமுக சார்பில் 8-வது வார்டில் போட்டியிட்ட கோவிந்தராசு மற்றும் 17-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற நடராஜன் வெற்றிபெற்றது செல்லாது எனவும் அதே வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட வல்லரசு ஆகியோர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜீஜாபாய் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.
 
அருள்முருகன் மற்றும் நடராஜன் ஆகியோர் திமுக-வில் இனைந்துள்ளனர்.  மேலும் நடராஜன் பேரூராட்சி துனை தலைவராக தேர்தெடுக்கபடும் நிலையில் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Congrats Mr. Ibrahim wish you all the very best...

Jahir Abbas