ஞாயிறு, அக்டோபர் 23, 2011

சமூக நலத் துறை அமைச்சரின் சொந்த ஊரில் திமுக வெற்றி

தமிழக சமூக நலத் துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் சொந்த ஊரான சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவராக
 திமுக வேட்பாளர் முகமது யூனூஸ் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.


இத் தேர்தலில் அதிமுக 3-ம் இடத்தை பெற்று தோல்வியடைந்துள்ளது.

திமுக வேட்பாளர் முகமது யூனூஸ் 4,854 வாக்குகள் பெற்று 1,395 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்:


ஜகந்நாதன் (சுயே)- 3,459, மாரிமுத்து (அதிமுக)-1,900, முஜிபுர் ரஹ்மான் (தேமுதிக)-373, ஜெயசங்கர் (சுயே)-592, முகமது சபியுல்லா (சுயே)-105. மொத்த
வாக்குகள் 15,799, பதிவானவை 10,504.

Source: Dinamani

கருத்துகள் இல்லை: