புதன், நவம்பர் 16, 2011

வரதட்சிணைக்காக திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை உள்பட மூவர் மீது வழக்குப் பதிவு

சிதம்பரம் அருகே நிச்சயம் செய்த பின்னர் வரதட்சிணை கேட்டு திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை, மாமியார், மைத்துனர் ஆகிய
 மூவர் மீது சிதம்பரம் மகளிர் போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சிதம்பரத்தை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த இளம்பாரதி மகள் புரட்சிமணி (25). இவருக்கு வரகூர்பேட்டையைச் சேர்ந்த ஆறுமுகன் மகன் லெட்சுமணனுக்கும் திருமணம் பேசி கடந்த 23-5-2011ல் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. 2-9-2011ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில் 12 பவுன் நகை வரதட்சிணையாக கேட்டு தராததால் திருமணத்தை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. நிச்சயதார்த்தத்துக்கு ரூ.35 ஆயிரம் செலவு செய்து, மாப்பிள்ளைக்கு 1 பவுன் செயின் போட்டதாகவும், தற்போது வரதட்சிணை கேட்டு திருமணத்தை நிறுத்திவிட்டார்கள் என புரட்சிமணி நகர மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி மாப்பிள்ளை லெட்சுமணன், மைத்துநர் ராமன், மாமியார் கலாவதி உள்ளிட்ட மூவர் மீது மகளிர் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: