சனி, நவம்பர் 12, 2011

சிதம்பரம் ரோமியோக்களுக்கு "கிலி'

சிதம்பரம் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்து போலீசில் சிக்கிய 14 வாலிபர்களை ஏ.எஸ்.பி., மன்னித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.


சிதம்பரத்தில் நகர பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளது. இதனால் பள்ளி விடும் மாலை நேரங்களில் இளைஞர்கள் பஸ் நிலையம், காந்தி சிலை, தெற்கு வீதி, கீழ வீதி, மேல வீதி ஆகிய பஸ் நிறுத்த பகுதிகளில் கூட்டமாக நின்றுகொண்டு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகளை கிண்டல் செய்து வந்தனர்.

சிதம்பரம் ஏ.எஸ்.பி., துரைக்கு தகவல் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து நேற்று மாலை ஏ.எஸ்.பி., உத்தரவின்பேரில் அவரது அதிரடிப்படையினர் சிதம்பரம் நகர பகுதிகளில் மாணவிகளை கிண்டல் செய்த 14பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.அவர்களிடம் ஏ.எஸ்.பி., விசாரணை நடத்தி, அறிவுரை கூறினார்.

அவர்களது மொபைல் போன்களில் இருந்த ஆபாச படங்கள் அழிக்கப்பட்டன. முதல் முறையாக இருப்பதால் உங்களை மன்னித்து அனுப்புகிறேன் என எச்சரிக்கையுடன் அனுப்பி வைத்தார்.ஏ.எஸ்.பி., யின் இந்த அதிரடி நடவடிக்கையால் சிதம்பரம் பகுதியில் பெண்களை கிண்டல் செய்துவந்த "ரோமியோக்கள்' அச்சமடைந்துள்ளனர்.

நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை: