திங்கள், நவம்பர் 14, 2011

அ.தி.மு.க.,விற்கு என்றும் ஆதரவு தரவேண்டும் : அமைச்சர் செல்வி ராமஜெயம் பேச்சு

அரசின் திட்டங்களை பெற்று பயனடைந்து என்றும் அ.தி.மு.க., விற்கு ஆதரவு தரவேண்டும் என விருத்தாசலத்தில் அமைச்சர்
 செல்வி ராமஜெயம் பேசினார்.

விருத்தாசலத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட சேர்மன் மல்லிகா, ஒன்றிய சேர்மன்கள் செல்வராஜ், கந்தசாமி, நகர மன்ற தலைவர் அரங்கநாதன், மாவட்ட கவுன்சிலர் ரவி முன்னிலை வகித்தனர். சமூக நல அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். விழாவில் அமைச்சர்கள் சம்பத், செல்வி ராமஜெயம் ஆகியோர் பயனாளிகளுக்கு திருமண உதவி தொகைகளை வழங்கிப் பேசினர்.
அமைச்சர் சம்பத் பேசுகையில், "தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் மூலம் பெண் சிசு கொலை முழுமையாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் படிக்கவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாகவும் இத்திட்டம் தொலை நோக்கு பார்வையுடன் அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.

அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசுகையில், "கடலூர் மாவட்டத்தில் 2ம் கட்டமாக திருமண உதவித் தொகை 1,500 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக வழங்கப்படும் திட்டங்களை பெற்று பயனடைந்து பொதுமக்கள் என்றும் அ.தி.மு.க., விற்கு ஆதரவு தரவேண்டும்' என்றார். பி.டி.ஓ., க்கள் சுலோசனா, சுந்தரம், கலியபெருமாள், செல்வநாயகி, ராஜவேலு, நந்தகோபாலன், அ.தி.மு.க., நகர செயலர் கலைசெல்வன், ஒன்றிய செயலர் பழனிவேல், நகர மன்ற துணைத் தலைவர் சந்திரகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை: