செவ்வாய், ஜனவரி 03, 2012

முத்துப்பேட்டை தர்காவில் ஏ.ஆர். ரகுமான் தொழுகை ( படங்கள் )திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ளது சேகுதாவூத் தர்கா. பிரபல இசைமைப்பாளர் AR.ரகுமான் திடீர் என்று இந்த தர்காவிற்கு சென்றார். அவரை தர்கா திருஸ்டி ச.பாக்கர் அலி சஹாஹிப் வரவேற்று அழைத்து சென்றார்.

தர்காவின் சேகுதாவூத் ஆண்டவரின் 40 அடி சமாதி வளாகத்திக்குள் சென்று பிரார்த்தனை மேற்கொண்டார். பின்னர் நடந்தே சென்று அருகில் உள்ளள அம்மா தர்காவிற்கும், அருகில் உள்ள ஆற்றாங்கரை பாவ தர்காவிற்கும் சென்று பிரார்த்தனை மேற்கொண்டார்.

பிறகு தர்கா நிர்வாகிகளின் ஒருவரான சித்திக் அஹ்மத் லெப் வீட்டிற்கு சென்று காலை உணவு சாப்பிட்டு புதிதாக கட்டப்பாட்ட குத்பா பள்ளிக்கு செல்வதாக புறப்பட்டார். ரகுமான் வந்த செய்திகள் கேள்விபட்டதும் ரசிகர்கள் கூட்டம் பள்ளிவாசலை முற்றிகையிட்டதால், அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார்.

ரோஜா படத்தில் இருந்து தான் இசையைமைக்கும் ஒவ்வொரு படத்தின் போதும் இங்கு வருவார் ரகுமான். இங்கு வந்து செல்வதால் இசைப்பயணம் இனிதாக இருக்கிறது என்று கருதுகிறார் ரகுமான் என்று தர்காவைச்சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.


கருத்துகள் இல்லை: