சனி, ஜனவரி 14, 2012

ஜமாஅத் தேர்தலில் திடீர் திருப்பம்: பரங்கிப்பேட்டையில் பரபரப்பு!



பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜமாஅத் செயற்குழுவில் விவாதங்களுக்கு பிறகு தேர்தல் முறை தான் என்று அறிவிக்கப்பட்டதுடன் தேர்தல் அதிகாரிகள்பெயர்களும் அறிவிக்கப்பட்டு, ஜமாஅத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக ஜமாஅத் தலைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ் பரபரப்பான அறிக்கை ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார்.
ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் நானோ ஜமாஅத் நிர்வாகிகளோ இல்லை இன்று என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கும் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.ஹமீது கவுஸ், இத்தேர்தலில் போட்டி இடப்போவது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்று ஜூம்ஆ தொழுகைக்குப்பின் பிரசுரம் வெளியிடப்பட்டது. இனி வரும் நாட்களில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது எனலாம். எம்.எஸ் முஹமது யூனுஸ் வெளியிட்டுள்ள இந்த 'நோட்டீஸின் நகல் (வாசகர்களின் பார்வைக்காக) கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: