வெள்ளி, ஏப்ரல் 01, 2011

இந்தியா-பாக்.கிரிக்கெட்- 3 பேர் பலி


:நேற்று முன்தினம் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இரு அணிகளும் மோதும் போட்டி என்றாலே ஏதோ போர் நடப்பதாக எண்ணிக் கொண்டு இரு நாட்டு ரசிகர்களும் பதட்டத்தோடு கண்டு ரசிப்பது வழக்கமாகிவிட்டது.
இந்தியா இப்போட்டியில் வென்றதைத் தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டங்கள் உள்நாட்டில் மட்டுமல்ல இந்தியர்கள் வாழும் வெளிநாடுகளிலும் நடந்தேறின.
‘விளையாட்டு வினையில் முடியும்’ என்பதற்கேற்ப, அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வியுறும் எனக்கூறிய கடை உரிமையாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
விஷால் குப்தா என்ற நபர்தாம் கொல்லப்பட்டவர்.

இந்தியா பேட்டிங்கை நிறைவுச்செய்த வேளையில் இப்போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் தோற்கும் என விஷால் கூறியுள்ளார். அப்பொழுது கடையில் தொலைக்காட்சியில் போட்டியை கண்டுக்கொண்டிருந்த சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக போலீஸ் கூறுகிறது.
இந்தியா வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து போட்டியை கண்டு ரசித்தவர்கள் பட்டாசுக் கொளுத்தி வெற்றியை கொண்டாடியுள்ளனர். வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு பிறகு குப்தாவை யாரோ துப்பாக்கியால் சுட்டுள்ளதை கண்ட சிலர் அவரை மருத்துவமனையில் சிகிட்சைக்காக கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் கொண்டு  சென்ற உடனேயே அவர் இறந்துவிட்டார்.
கொலைக்கு பின்னணியில் என்ன காரணம்? என்பது தெளிவாக தெரியவில்லை என நகர எஸ்.பி ஜெகெ ஸஹி தெரிவித்துள்ளார். விசாரணை நடந்துக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் வேளையில் நூர் நகரில் சுஷில்குமார் என்பவருக்கும் குண்டடிப்பட்டது. இவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார்.
இந்திய அணி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கிழக்கு டெல்லியில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட்டவேளையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 45 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் மரணமடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை: