வெள்ளி, ஏப்ரல் 01, 2011

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு:விசாரணை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பு


அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ)யிடம் ஒப்படைக்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநில முதலமைச்சரின் அனுமதி கிடைத்தவுடன் வழக்கு என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்கப்படும்.
25 தினங்களுக்கு முன்பு வழக்கை என்.ஐ.ஏவிடம் ஒப்படைப்பதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆராய்ந்ததாக கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே.தேப் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப்படை(ஏ.டி.எஸ்), சட்ட அமைச்சகம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்த பிறகு கோப்பினை முதல்வருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் இதற்கு காலதாமதமில்லாமல் அனுமதியளிப்பார் என நம்புவதாகவும் தேப் தெரிவித்தார்.

அஜ்மீர், மக்கா மஸ்ஜித், மலேகான் உள்ளிட்ட வழக்குகளில் ஒரே அமைப்பின் பங்கிருப்பதால் இவ்வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
2007-ஆம் ஆண்டு நடந்த அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்

கருத்துகள் இல்லை: