திங்கள், செப்டம்பர் 26, 2011

வாய்க்காலில் அரசு பஸ் கவிழ்ந்து மாணவிகள் உள்பட 13 பேர் காயம்

 சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் சனிக்கிழமை அரசு டவுன் பஸ் ஒன்று சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில் 11 மாணவிகள் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.


சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோவிலுக்கு புத்தூர் வழியாக அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. அப்போது மணல்மேடு அண்ணா பாலம் அருகே பாசன வாய்க்காலில், எதிர்பாராதவிதமாக பஸ் கவிழ்ந்தது.

இதில் பஸ்ஸில் பயணம் செய்த தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் ரம்யா (16), அருளம்மை (16), வென்னிலா (16), கிருத்திகா (17), ஞானப்பிரியா (16), மனோரஞ்சிதம் (16), ஜான்சிராணி (16), திவ்யா (16), சௌமியா (16), சுமதி (16), ஹேமலதா (16) மற்றும் டிரைவர் ராஜேந்திரன் மற்றும் ரவிக்குமார் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். அனைவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து புத்தூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: