புதன், செப்டம்பர் 21, 2011

தேசிய கருத்தரங்கம்

பரங்கிப்பேட்டையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் நீர் உயிர்நச்சு பற்றிய தேசிய கருத்தரங்கு செப்டம்பர் 14 முதல் 16 வரை 3 நாள்கள் நடைபெற்றது.

துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தொடங்கி வைத்துப் பேசினார். கடல்வாழ் உயிரியல் புல முதல்வர் டி.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். சென்னை தேசிய கடல்தொழில்நுட்ப விஞ்ஞானி முனைவர் ஆர்.வெங்கடேசன் சிறப்புரையாற்றினார்.

உதவிப் பேராசிரியர் எம்.ஆறுமுகம் நன்றி கூறினார். கருத்தரங்கு ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியர்கள் எஸ்.பிரகதீஸ்வரன், எஸ்.எம்.ராஃபி ஆகியோர் செய்திருந்தனர்.

இக்கருத்தரங்கில் பல்வேறு விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பங்கேற்று தங்களது ஆய்வு முடிவுகளை சமர்ப்பித்து விவாதித்தனர். கருத்தரங்கிற்கான நிதியுதவியை மத்திய அரசின் பூகோள அறிவியல்துறை, உயிர்தொழில்நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இந்திய மருத்துவக்கழகம், அறிவியல் தொழிற்சாலை ஆராய்ச்சியகம் ஆகியவை வழங்கியுள்ளது.

கருத்தங்கம் குறித்து கடல்வாழ் உயிரியல் புல முதல்வர் டி.பாலசுப்பிரமணியன் கூறியது:

ஆரோக்கியத்திற்கு தேவையான இயற்கை பொருள்கள் மற்றும் உயிர்வினை மூலக்கூறுகள், அதன் இன்றியமையாமையை எடுத்துரைக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இயற்கை கரிம மூலக்கூறுகள் பலவிதத்தில் பயன்படுத்தப்படுகிறது. இன்றும் கண்டுபிடிக்க வேண்டிய சிலவும் உள்ளது.

புதிய மூலக்கூறுகள் கண்டிபிடிப்பது மூலம் அடிப்படை அறிவியல் கொள்கைகள், மதிப்புக்கூட்டிய புதிய மூலக்கூறுகள், மருத்துவ வினையூக்கிகள் கொண்டு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சேர்மங்கள் ஆகியன புதிய அறிவியல் களங்களை உருவாக்குகின்றன.

இதன்மூலம் மனிதவளத்திற்கு பயன்பாடுகள் உள்ளன. கடல் உயிரினங்களிலிருந்து பிரித்து எடுக்கப்படும் மூலக்கூறுகள் மற்றும் வேதிய கூட்டு சேர்மங்கள் அதிக முக்கியத்துவம் பெருகின்றன. இதனால் இந்த தேசிய அளவிலான நீர் உயிர்நச்சு கருத்தரங்கம் உயிர் மருத்துவ தொழில்நுட்பம், நோய் தாக்கவியல், உயிர் வேதியியல், செய்முறை மருந்தியல், புற்றுநோய், நரம்பு அறிவியல் மற்றும் நுண்ணியல் துறைகளின் பயன்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.


கருத்துகள் இல்லை: